Friday, December 21, 2018

பிரபஞ்சன் - காற்றில் கலந்த கம்பீரம்




மறைந்த எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன் அவர்களுக்கு செவ்வணக்கம்.

நோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் தனது படைப்புப் பணியை தொடருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.

எழுத்து, தோற்றம், பேச்சு என எல்லாவற்றிலும் கம்பீரமானவர்.  வெளிப்படையானவர். அவரது எழுத்துக்களைத் தாண்டி அவரோடு பரிச்சயம் கிடையாது என்றாலும் அவரை சந்திக்கும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது.

புதுவையில் எங்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அந்த உரை இன்னும் மனதில் நிற்கிறது.



அக்கூட்டத்தில் அவர் முன்வைத்த ஒரு விமர்சனம் முக்கியமானது.

அந்த விமர்சனம்.

“இந்த கூட்ட அழைப்பிதழில் என் பெயரை விட  பெரிய எழுத்தில் மூவருடைய பெயர் அச்சிடப்பட்டுள்ளதை அவமானமாக கருதுகிறேன். இன்னும் ஏழு பேருடைய பெயர், என்னை விட சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது என்பதை மிகப் பெரிய அவமானமாக கருதுகிறேன். எழுத்தின் அளவில் பாரபட்சம் பார்ப்பது என்பது சரியல்ல”

இந்த சரியான விமர்சனத்தை சில சந்தர்ப்பங்களில் அதை அமலாக்க முடிவதில்லை என்பதையும் சுய விமர்சனத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மன்னித்துக் கொள்ளுங்கள் தோழர் . . .

துயரம் கலந்த அஞ்சலி தோழரே . . .

1 comment:

  1. கரந்தை மண்ணில் பயின்ற எழுத்தாளரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete