நேற்று எங்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல்.
யமஹா தொழிற்சாலையில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் இரண்டு தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை பணி நீக்கம் செய்ததுதான் காரணம்.
அந்த இரண்டு தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை மட்டும் ஏன் நிர்வாகம் தேர்ந்தெடுத்தது தெரியுமா?
நிர்வாகத்தின் அதிகாரிகளே சொன்ன காரணம் இது.
அந்த இரண்டு தோழர்களுக்கும் தந்தை கிடையாது. இருபத்தி ஐந்து வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பவர்கள். ஒரு தோழருக்கு அக்காவின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. இன்னொரு தோழருக்கு திருமண வயதில் தங்கை.
இப்படி குடும்ப நெருக்கடியில் உள்ள தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் சரணாகதி அடைந்து நிர்வாகத்திடம் பணிந்து விடுவார்கள். சங்கத்தை எளிதில் உடைத்து விடலாம் என்று திட்டமிட்டு அவர்கள் இருவரை பணி நீக்கம் செய்தது யமஹா நிர்வாகம்.
தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தால் நிர்வாகத்தின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
எவ்வளவு நுட்பமாக முதலாளிகள் சிந்திக்கிறார்கள் பாருங்கள் . . .
இது போன்ற முதலாளிகளிடம்தான் மோடி சரணடைந்துள்ளார். ஆனால் உழைக்கும் வர்க்கம் உறுதியாக நிற்கிறது.
பிகு
கூட்டம் முடிந்து பேசிக்கொண்டிருந்த போது தோழர் கனகராஜ் சொன்ன இன்னொரு தகவல் மெய் சிலிர்க்க வைத்தது.
அத்தகவல் நாளை . . .
No comments:
Post a Comment