இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவோம் . . .
இந்த
நாள் நல்ல நாள்.
மோடி
அரசின் வீழ்ச்சியின் தொடக்க நாள்.
போலி
வாக்குறுதிகளும் பொய் முழக்கங்களும் கொடுத்து ஆட்சிக்கு வந்த அயோக்கியர் கூட்டத்தின்
அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்ற செய்தி தேசமெங்கும் ஒலித்த திரு நாள்.
வடக்கில்
ஒன்று, கிழக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று, மத்தியில் இரண்டு என ஐந்து மாநிலங்களிலும்
தாமரை கருகியது தேசத்திற்கு விடியல் நிச்சயம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
விஷம்
கக்கும் பேச்சுக்களால் வெறுப்பைத் தூண்டுவது, மதத்தின் பெயரால் மக்களை பிளப்பது, தரந்தாழ்ந்த உரைகள் மூலம் கேவலமான தாக்குதல் நடத்துவது
போன்ற மோடியின் அம்புக்கள் அனைத்தையும் மக்கள் முனை மழுங்க வைத்து விட்டனர்.
ஐந்து
மாநிலங்களிலும் பாஜக நிராகரிக்கப்பட்டதை விட ஒரு மகிழ்ச்சியான செய்தி வேறு ஏதெனும்
இருக்க முடியுமா என்ன?
ஸ்வீட்
எடுங்க, கொண்டாடுங்க . . .
பிகு:
மூன்று
மாநில வெற்றிக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து கூறும் அதே வேளையும் இந்த வெற்றியின்
மூலம் மிதப்போ, திமிரோ, சுணக்கமோ வந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக
விற்கு அழைப்பு கொடுப்பதாகவே அமைந்து விடும் என்ற எச்சரிக்கையையும் சொல்ல வேண்டியுள்ளது.
பொறுப்போடு
மக்கள் நலன் சார்ந்து செயல்படுங்கள், இனியாவது. .
காங்கிரஸ் தோற்றால் EVM மோசடி
ReplyDeleteவென்றால் மக்கள் தீர்ப்பு
இந்த மோடி எதிர்ப்பாளர்களுக்கு நேர்மை என்பதே கிடையாதா ?
அப்படித்தான் நல்லா புலம்பனும்
Deletehttps://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/47688696_523687328136244_8174404301477642240_n.jpg?_nc_cat=1&_nc_ht=scontent-maa2-1.xx&oh=0a79779e3814bd715d45c1d376ec147f&oe=5CA505B7
Deleteஇந்த புலம்பல் நிரந்தரமல்ல
ReplyDeleteமீண்டு எழுவோம்
அதீத தன்னம்ம்பிக்கை ஒரு தோல்விக்கு காரணம்
வென்ற காங்கிரஸ் கூட பாரிய வெற்றி கூட இல்லை
காங்கிரஸ் எப்படி பார்ப்பனர் வேஷம் போட்டு வென்றதோ அதே பாணியை மீண்டும் நாங்கள் பின்பற்றுவோம்
தவறுகளில் இருந்து மீண்டு எழ காலம் உண்டு
தென் மாநிலங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் எமக்கு ( வங்கம் தவிர்த்து ) வெற்றி நிச்சயம்
உத்தரம் என்றும் எம்மை கைவிடாது
மாயாவதி என்றைக்கும் காங்கி கூட சேர போவதில்லை
லோக் சபா மீண்டும் எங்களுக்கே
ஒரே ஒரு ராமர் கோயில் போதும் எங்களுக்கு
ReplyDeleteமொத்தத்தில் நீங்கள் திருந்தப் போவதில்லை.
DeleteHello anonymous, Still definitely it is EVM tampered, otherwise, Congress comes with more than full majority. sorry for typing in tamil.
ReplyDelete