Tuesday, December 4, 2018

போப்பாண்டவர் சொன்னது சாமியார்களுக்கும் பொருந்தும் . . .



"பாதிரியார்களோ அல்லது கன்னியாஸ்திரிகளோ, அவர்களால் பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்க முடியாவிட்டால் அவர்கள் அந்த பொறுப்பிலிலிருந்து விலகி விடுங்கள்"

என்று போப்பாண்டவர் கூறியுள்ளது மிகவும் சரியானது.

பாலியல் வன் கொடுமைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் வேளையில் பசும்தோல் போர்த்திய புலிகளாக இருக்காதீர்கள். உங்களால் கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட முடியவில்லையென்றால், உணர்வுகளை திருமண வாழ்விற்கு சென்று விடுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.

இதனை வெளிப்படையாகச் சொன்னதற்கு போப்பாண்டவரைப் பாராட்ட வேண்டும்.

இது பாதிரியார்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத சாமியார்களுக்கும் பொருந்தக் கூடியதுதான்.

முதன் முதலில் விஜயேந்திர சரஸ்வதி மீது புகார் வந்த போதே நான் சொன்னேன்.

"பாவம், சின்னப்பையன். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும். இல்லற வாழ்வில் ஈடுபட விருப்பமும் இருக்கும். இப்படி சாமியாராக்கி கட்டுப்பாடுகள் செய்தால், அதிலிருந்து விடுபட இப்படி தடம் மாறியுள்ளான். சாமியாராக திணிப்பதற்கு முன்பு விருப்பத்தை கேட்டிருக்க வேண்டும்"

என்று பலரிடமும் கூறினேன்.

ஆனால் சாமியாராவதே இது போன்ற வாய்ப்புக்களுக்குத்தான் என நித்யானாந்தாக்கள் உட்பட பல போலிச்சாமியார்கள் வாழும் உதாரணமாக தோன்றுகிறார்கள். 

என் செய்வது?

போலிச்சாமியார்களும் பாலியல் குற்றச்சாட்டுக்களும் ஓயாது. 

No comments:

Post a Comment