Wednesday, October 31, 2018

போட்டோஷாப் - தொழில் சுத்தம்

தமிழைக் கொலை செய்து படேல் சிலையை காமெடி செய்த பெருமை மோடி அரசுடையது என்றால் 

அதை போட்டோஷாப் செய்து காமெடியை தொடர வைத்த பெருமை தமிழக மீம் கிரியேட்டர்களையே சாரும். 

மோடியின் போட்டோஷாப் வித்தை அவருக்கு எதிராகவே திரும்புகிறது.

பாவம், இதனை படேல் சிலைக்கு செய்திருக்க வேண்டாம். ஆனாலும் தொழில் வெகு சுத்தம் என்பதையும் சொல்லத்தான் வேண்டியுள்ளது. சங்கிகளின் போட்டோஷாப்புகளில் இவ்வளவு நேர்த்தி இருக்காது .  . . 

அதிலும் மொட்டை ராஜேந்திரன் சூப்பர் !






எச்.ராசாவோட வேலையோ?





மோடி அரசு இன்னொரு முறை தமிழர்களிடத்தில் அசிங்கப்பட்டுள்ளது.

Statue of Unity என்ற பெயரில் திறக்கப்பட்ட படேல் சிலைக்கு தமிழில் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி”   என்ற வினோதமான பெயரை அளித்துள்ளார்கள்.

இப்போது அதை அழிக்கவும் செய்துள்ளார்கள்.



யார் இந்த மொழிபெயர்ப்பை செய்திருப்பார்கள்?

என் சந்தேகம் என்னவோ MICRO IRRIGATION என்பதை சொட்டு நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்த எச்.ராசா மீதுதான்.

பிகு : நமக்கு தெரிந்தது தமிழ் மட்டுமே. மற்ற மொழிகளில் என்ன கோளாறுகள் இருக்கிறதோ?

மொத்தம் பத்து மொழிகள் அங்கே உள்ளது. ஃப்ரெஞ்ச் மொழி போல ஒன்று உள்ளது.  சீன மொழியோ ஜப்பான் மொழியோ ஏதோ ஒன்று உள்ளது. ஒரு மொழி அரபியா இல்லை உருதா என்று எனக்கு தெரியவில்லை.

இதிலே தெலுங்கு உள்ளதா என்று எங்கள் பிரிவு அதிகாரியிடம் கேட்டேன். அவர் தெலுங்கும் கிடையாது, கன்னடமும் கிடையாது என்றார்.  மலையாளம் இல்லை என்பதும் தெரிகிறது

கடைசியாக உள்ளது பெங்காலி மொழி என்றும் அது சரியாக உள்ளது என்று ஒரு மேற்கு வங்கத் தோழருக்கு அனுப்பிய போது அவர்  கூறினார். ஒரிய மொழி விடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒற்றுமையின் சிலை என்று பெயர் வைத்து விட்டு இப்படி பல மொழிகளை கண்டு கொள்ளாமல் விட்டவர்களா ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள்?????

பிகு 2

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த மோடியை பாராட்டாமல் விமர்சனம் செய்வது தமிழ்த் துரோகம் என்று ஒரு கோஷ்டி கிளம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Tuesday, October 30, 2018

திருட்டுக்கதைக்குத்தான் ஜெமோ இவ்வளவு பில்ட்டப்பா?



விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள "சர்கார்" வருண் ராஜேந்திரன் எழுதிய "செங்கோல்" கதைதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டு முப்பது லட்சம் ரூபாய் பணமும் டைட்டிலில் போடுவதாகவும் ஒப்புக் கொண்டு பஞ்சாயத்தை முடித்து விட்டார். படைப்பாளிக்கு நியாயம் கிடைக்க உதவிய இயக்குனர் பாக்யராஜிற்கு பாராட்டுக்களை பதிவு செய்வது அவசியம்.

ஆனால் இந்த பிரச்சினையில் முருகதாஸிற்கு முட்டு கொடுத்த சர்வலோக இலக்கியவாதி ஜெமோவை எப்படி விட்டு விட முடியும்?

"என்னையும் அரிவாளைத் தூக்க வச்சுட்டீங்களேடா " என்ற ரேஞ்சில்  என்ன பில்ட் அப் கொடுத்தாரு அவரு!

அவருடைய வலைத்தளத்தில் சினிமா பற்றி எழுதக் கூடாது என்ற தவத்தையே கலைத்து விட்டார்கள் என்று தொடங்கிய அந்த கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும். (அவரது வலைத்தளத்தில் சினிமா பற்றியெல்லாம் எழுதத்தான் செய்துள்ளார். இருந்தாலும் ஏதோ முதல் முறையாக எழுதுவது போல ஒரு நடிப்பு)

அந்த கட்டுரையில் ஜெமோ உதிர்த்த முத்துக்கள் இவை . . .

சர்க்கார் படம் நான் பணியாற்றியது. 

பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். 

கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது.

 ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும்.

தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை!” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட  இந்த ஒரே வரிதான் கதை. ‘

ஒரு திருட்டுக் கதைக்கு ஏன் ஜெமோ இவ்வளவு பில்ட் அப்?

நீங்க அரிவாளை தூக்காம இருந்திருந்தா, இப்போ இந்த கேள்வியை கேட்பதற்கான அவசியமே வந்திருக்காது. 

அந்த கட்டுரையை கீழ்க்கண்ட வரிகளை எழுதி முடித்துள்ளார் ஜெமோ. 

என்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.
சாரே, நீங்க நாவலை மட்டும் எழுதுங்க, அது நல்ல நாவலா இல்லையா என்று நாங்க முடிவு செய்து கொள்கிறோம்.

பிகு
முருகதாஸின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பின்பு ஜெமோ கொடுத்துள்ள விளக்கம் என்பது விளக்கெண்ணெய்க்கு நிகராக உள்ளது. 

காலி நாற்காலி புதுசா பொன்னார்?


நாகை மாவட்டம், வேதாரண்யம் பக்கத்தில் ஆதனூர் என்ற கிராமத்தில் ஒரு சுகாதார மையத்தை திறந்து வைக்கப் போன அமைச்சர் பொன்னார் மேடையேற மறுத்து விட்டாராம்.

காரணம்?

20 நர்ஸ், 10 டாக்டர், ஆறு விவசாயிகள், இவரோடு வந்த கட்சிக்காரர்கள் 15 பேரைத் தவிர வேறு ஆட்களே இல்லையாம். அந்த விவசாயிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனு கொடுக்க வந்தவர்கள்.

அதிகாரிகளிடம் அவர் சத்தம் போட, அவர்கள் வீடு வீடாக சென்று மக்களை அழைக்க ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ஐம்பது பேர் தேற மொத்தமாக நூறு பேர் மத்தியில் வீர உரை ஆற்றியுள்ளார்.

ஐய்யா பொன்னார் அவர்களே,

இப்படி ஆள் பிடித்து ஆள் பிடித்து பேசும் பிழைப்பெல்லாம் உமக்கு தேவையா? 

காலி நாற்காலிகள் உமக்கு புதுசா என்ன? லட்சக்கணக்குல செலவு செய்யற உங்க கட்சி மாநாடுகளிலேயே காலி நாற்காலிங்களைப் பார்த்துதான் பேசறீங்க! 

இங்கேதான் 

20 நர்ஸ், 
10 டாக்டர்
15 கட்சிக்காரங்க

45 பேர் இருந்தாங்களே, இதுக்கு மேலயும் உங்க கூட்டத்துக்கு ஆள் வேணுமா என்ன!

ஆனாலும் அநியாய பேராசையா உமக்கு!


Monday, October 29, 2018

நிதானமாக இருந்திருக்கலாமே சிவக்குமார்?



அந்த இளைஞன் சூர்யாவின் ரசிகனாக இருக்கலாம், கார்த்தியின் ரசிகனாக இருக்கலாம். ஏன் சிவக்குமாரின் ரசிகனாகவே கூட இருக்கலாம்.

சிவக்குமார் ஒரு முக்கியமான ஆளுமை என்பதால்தான் அவரோடு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான். அதற்காக அவரை தொந்தரவு கூட செய்யவில்லை. தூரத்தில் நின்று கொண்டு ஃப்ரேமில் இருவரும் இருப்பது போல முயற்சி செய்து கொண்டிருந்தான்.

படமெடுப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் "குணமாக" சொல்லியிருக்கலாம். அல்லது கண்டித்துக் கூட சொல்லி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் அது உங்களுக்கும் அவனுக்கும் மட்டுமான விஷயமாக இருந்திருக்கும்.

ஆனால் நீங்களோ "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற பழமொழியை உங்கள் சார்பிலும் ஒரு முறை நிரூபித்து அந்த பையனின் தொலைபேசியை தட்டி விட்டீர்கள்.

அந்த பையனுக்கு அவமானம் எப்போதும் உறுத்திக் கொண்டிருக்குமே! இப்படிப்பட்ட ஒரு நபரோடு போய் படம் எடுத்துக் கொள்ள விரும்பினோமே என்று நினைத்திருப்பான். அது உங்களுக்கல்லவா அவமானம்!

யோகா செய்தால் மனதை கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஊருக்கு உபதேசம் செய்தவரின் ஒழுங்கைப் பாருங்கள் என்று உங்களின் காணொளி உங்களை உலகெங்கும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் திரு சிவக்குமார் அவர்களே!




காவிகள் ஆஸ்ரமத்தை எரித்தது என்?




ஊடக விவாதங்களில் மடக்கியதால் ஆத்திரம்
சுவாமி சந்தீபானந்தகிரிக்கு குறி வைத்தது சங்பரிவார்

திருவனந்தபுரம், அக்.28-சுவாமி சந்தீபானந்தகிரி நீண்ட காலமாகவே சங்பரிவாரால் குறி வைக்க ப்பட்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் சபரிமலையில் பின்பற்றப்பட்டு வந்த மரபுகள் குறித்தும் சாஸ்த்திர சம்பிரதாயங்கள் குறித்தும் ஆதாரப்பூர்வமாக அவர் வாதிட்டது சங்பரிவார் அமைப்பினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதே அவரது ஆஸ்ரமம் தீவைக்கப்பட்டதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுவாமி சந்தீபானந்தகிரி தொலைக்காட்சி விவாதங்களில் ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களின் வாதங்களை தனக்கு இந்து தர்ம சாத்திரங்களில் இருந்த புலமையால் முனைமழுங்கச் செய்து வந்தார். சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வாதிட்ட காங்கிரஸ் – பாஜக தலைவர்களுக்கும் அவர்க ளது சாதிய அரசியல் கூட்டாளிகளுக்கும் இந்து பிராமண கிரந்தங்கைக் கூறி பதிலடி கொடுத்து வந்தார். அண்மைக்காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் சுவாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வந்தனர். சந்தீபானந்தகிரியை தனிப்பட்ட முறையில் அச்சமூட்டவும் சங்பரிவார் பேச்சாளர்கள் முயன்றனர். 

மற்றவர்களின் வாதங்களை அமைதியாக கேட்ட பிறகு மெதுவாக தனது வாதங்களை முன்வைப்பார். அண்மையில் தொகுப்பாளரும் ராகுல் ஈஸ்வரின் மனைவியுமான தீபா பங்கேற்ற விவாதத்தில் சாஸ்தா – அய்யப்பன் குறித்த நம்பிக்கைகள் குறித்து சந்தீபானந்தகிரி விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டது. அய்யப்பனுக்கு பூர்ணா, புஷ்கலா என்கிற இரண்டு மனைவியர் இருந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதற்கு ஆதாரமாக இவர்களது பெயரில் திருவனந்தபுரத்தில் கோயில் உள்ளதையும் சந்தீபானந்தகிரிசுட்டிக்காட்டினார். ஐயப்பன் சாஸ்தாவில் ஐக்கிய மானதோடு அய்யப்பனும் சாஸ்தாவும் ஒன்றாகி விட்டார்கள் எனவும் சாஸ்தாவுக்கு பிரபா என்கிற மனைவியும் சத்யகன் என்கிற மகனும் உள்ளதாக சுவாமி கூறினார். 

காணிப்பையூரின் சாஸ்திர கல்பம் என்கிற இந்து ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கத்தை கூறினார். காணிப்பையூர் தனதுகிரந்தத்தில் அய்யப்பனுக்கு பதில் சாஸ்தா என்றே மூர்த்தியைக் குறிப்பிடுகிறார். சபரிமலையில் மூர்த்தி எது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணமான சபரிமலையானத்தில் எந்த இடத்தி லும் நைனிக பிரம்மச்சாரிய மூர்த்தி என்கிற நம்பிக்கை குறித்து தெரிவிக்கவில்லை எனவும் அந்த விவாதத்தில் சுவாமி கூறினார்.

மற்றொரு விவாதத்தில் ஆச்சாரங்கள் காலந்தோறும் திருத்தப்பட்டு வரு கின்றன என்பதற்கு சான்றாக நம்பூதிரி-நாயர் சமுதாயங்களில் நீடித்து வந்த சம்பந்தம் என்கிற ஆச்சாரம் இப்போது இல்லாதது குறித்தும் சந்தீபானந்தகிரி விளக்கினார். நவீன மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு சம்பந்தம் என்கிற ஆச்சாரத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி - தீக்கதிர் 29.10.2018

பாவம் ,விரக்தியின் வெளிப்பாடு . . .



கேரள நிதியமைச்சரும் பொருளாதார நிபுணரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் தாமஸ் ஐசக் அவர்கள், ஆட்சியைக் கலைப்போம் என்ற அமித்ஷா மிரட்டலை கச்சிதமாக நான்கே வரிகளில் சிதறடித்து விட்டார்.

சபரிமலை ஐயப்பனை ஆயுதமாக பயன்படுத்தி செய்யும் கலவரங்களில் காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பவாதமாக கைகோர்த்துக் கொண்டும் இடது முன்னணி அரசை காவிகளால் அசைக்க முடியவில்லை. 

அந்த வெறுப்பின், விரக்தியின் வெளிப்பாடே ஆட்சியைக் கலைப்போம் என்று மிரட்ட வைத்தது.

அதுவும் இப்போது மொன்னையாகி விட்டது.

பாவம்!!!!!!!!

Sunday, October 28, 2018

கெத்துன்னா இதுதான் . . .

விளக்கம் வேண்டாம். படமே போதும் . . .


நேரில் கேட்டது போல . . .

எங்களுடைய சென்னைக் கோட்டம் I ன் பொது மாநாட்டில் எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் ஆற்றிய ஒரு அற்புதமான உரையை எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் மிக அழகாக தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார்.

இன்சூரன்ஸ் ஊழியர்களைத் தாண்டி இத்தேசத்தின் உழைக்கும் மக்களுக்கு செல்ல வேண்டிய முக்கியமான பல செய்திகள் இருப்பதால் இந்த சிறப்பான உரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேரில் கேட்டது போன்ற உணர்வை தோழர் சுவாமிநாதனின் தொகுப்பு அளிக்கிறது.



மிகவும் நெருக்கடியான காலத்தை சந்தித்து வருகிறோம். 

ஊதிய உயர்வு, இன்னொரு பென்சன் வாய்ப்பு, நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியன நமது கோரிக்கைகளாக உள்ளன. 

ஆனால் இன்று நிறைய கேள்விகள் நம் முன்னே எழுந்துள்ளன. இந்திய ஜனநாயகம் நிலைக்குமா? மதச் சார்பின்மை நிலைக்குமா? ஆகிய கேள்விகள் தொழிற்சங்கத்தின் எதிர்காலம், நமது கோரிக்கைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துபவை ஆகும். 

இந்தியாவில் சிறந்த அரசியல் சாசனம் இருக்கிறது. ஆனால் அது போதுமா? 1919 ல் ஜெர்மனியில் சிறந்த அரசியல் சாசனம் இருந்தது. அது நிலைத்ததா? ஏன்? மக்களின் விழிப்பு, உறுதி, போராட்டமே அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற முடியும். 

2014 ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது மக்களுக்கு அதிருப்தி, கோபம் இருந்தது. நாம் கூட நாக்பூர் மாநாட்டில் விவாதித்தோம். தனி நபர்கள் தேவதூதர்களாக ஆகமுடியாது. கொள்கைகளே முக்கியம் என்றோம். இருந்தாலும் தேர்தல் முடிவுகளில் தனிநபர் சாகசம் மீதான நம்பிக்கையே வெளிப்பட்டது. அதன் விளைவு இன்று நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம். பொதுத்துறை இன்று தாக்கப்படுகிறது. பன்முக கலாச்சாரம் தாக்கப்படுகிறது. கல்விக்குள் அறிவியலுக்கு புறம்பான திணிப்புகள் அரங்கேறுகின்றன. 

இந்திய அரசியல் கட்டமைப்பின் முக்கியமான நிறுவனங்கள் திடடமிட்டு சிதைக்கப்படுகின்றன.

சில நாட்களாக சி.பி.ஐ யில் நடைபெறுகின்ற மோதலை பார்க்கிறோம். அது இரு நபர்கள் பிரச்சினை அல்ல. சட்டத்தின் ஆட்சியே கேள்விக்குறியாகி உள்ளது. சபரிமலையில் நடந்ததை பார்த்தோம். கும்பல் வன்முறை அரசியல் சாசனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. 

எமெர்ஜென்சியில் அரசியல் எதிரிகளின் இல்லங்களின் கதவுகள் நள்ளிரவில் தட்டப்படடன. இப்போதோ சி.பி.ஐ தலைவரின் இல்லக்கதவே தட்டப்படுகின்றன. அலோக் வர்மா என்ன கூறுகிறார்? " அரசு என் மீது மகிழ்ச்சியாக இல்லை. சில விசாரணைகள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது". 

சி பி ஐ மட்டுமல்ல. 

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சாரியா கூறுகிறார். " ரிசர்வ் வங்கி தனது நிர்வாக சுதந்திரத்தை இழந்து வருகிறது".பண மதிப்பு நீக்க பிரச்சினையின் போதே இந்த கேள்வி எழுந்து விட்டது. இதே கேள்வியையே நாம் எல்.ஐ.சி நிர்வாகத்திடமும் எழுப்பி வருகிறோம். முதலீட்டு முடிவுகளில் அரசு தலையிடலாமா? இதுவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள். 

தேர்தல் ஆணையம் இன்னொரு உதாரணம். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவராக இருக்க வேண்டும் என்பார்கள். நம்மை பொறுத்தவரையில் சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்படடவராக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் காலை 12 மணிக்கு 5 மாநில தேர்தலை அறிவிக்கவேண்டிய கூட்டத்தை மதியம் 2 மணிக்கு தள்ளிப் போடுகிறது. ஏன்? ராஜஸ்தானில் மதியம் 12 மணிக்கு பிரதமர் பேசிய பொதுக் கூட்டம்தான். அவர் தேர்தல் விதிமுறைகள் குறுக்கிடாமல் அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் வழி செய்து தந்தது. 

உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக 
" உச்ச நீதி மன்றத்தின் மாண்பை காப்பாற்று" என்று பொது வெளிக்கு வந்தார்கள். 

ஆகவே ஜனநாயகத்தை காப்பாற்று என்ற முழக்கம் தேவைப்படுகிறது. அதோடு இணைந்ததுதான் நமது உரிமைகள், போராட்டங்கள், பிரச்சினைகள், கோரிக்கைகள். 

மக்களின் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. 15 லட்சம் கருப்பு பணம் வங்கி கணக்கில் வந்ததா? 10 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? இதுவெல்லாம் விவாதிக்கப்படுகிறதா? மௌல்விகள், பாதிரியார்கள், துறவிகள் அறிக்கைகள் விடுவதும், சர்ச்சைகள் ஆவதுமான பிரச்சினைகள் 24*7 தொலைகாட்சிகளில் விவாதிக்கப்படுகின்றன. அமித் ஷா கர்நாடகாவில் இந்து துறவிகள் கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கு வேண்டுகோள் விடுக்க வைக்கிறார். ஊடகங்கள் அது பற்றி விமர்சிக்க மறுக்கின்றன.

 இந்தியாவின் டாப் 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிக்கிறார்கள். அமெரிக்க, பிரிட்டன் கனவுகளோடு இருக்கிறார்கள். அவர்களே பொருளாதார பாதையை தீர்மானிக்கிறார்கள். செல்வம் பெருகியுள்ளது. அதை அவர்களே அபகரித்துள்ளார்கள். அதில் ஒரு பகுதி கிடைத்திருந்தால் கூட வறுமையை ஒழித்திருக்க முடியும். 

மோடிக்கு "சோல்" விருது தரப்பட்டுள்ளது. குஜராத் ரத்தக்கறை அவரின் கரங்களில் உள்ளது. இன்றும் அவர் ஆட்சியில் தலித்துகள் தாக்கப்படுவதை தடுக்க அவர் செய்தது என்ன? 

க்ரெடிட் சுசி அறிக்கை கூறுவது என்ன? 135 கோடி மக்களின் 1.35 கோடி பேர் 52 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். டாப் 10 சதவிதமானவர்கள் 76 சதவீத செல்வத்தை வைத்துள்ளனர். இந்தியா மிக அதிகமான சமத்துவமற்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அமெரிக்க, ரஷ்யாவை விட சமத்துவமின்மை இங்கு அதிகம். மனித வளக் குறியிட்டில் இந்தியாவின் நிலைமை என்ன? எவ்வளவு நாள் வாழ்வார்கள்? கல்வியின் நிலைமை என்ன? சுகாதாரத்தின் நிலை என்ன? 180 நாடுகளில்  இந்தியாவின் இடம் 130. பங்களாதேஷ் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது.

ஆனால் வறுமை, அடிமைத்தனம், லஞ்சம் குறியீடுகளில் மிகவும் பின் தங்கி உள்ளோம். 25 கோடி மக்கள் இரவு உணவின்றி தூங்க செல்கிறார்கள். கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு இன்றி உள்ளனர். பிரதமர் மீதே சந்தேக நிழல் ரபேல் ஒப்பந்தத்தால் விழுந்திருக்கிறது. ஆகவே இக் குறியிடுகளில் எல்லாம் பின் தங்கி இருக்கிறோம். 

அஸிம் பிரேம்ஜியின் அறிக்கை 2014- 17 ல் 70 லட்சம் வேலைகள் காணாமல் போயுள்ளன. 16 சதவீத இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். 

 குஜராத்தில் ஒரு புலம் பெயர் தொழிலாளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டான் என்று பிரச்சினை வெடித்தவுடன் ஒட்டு மொத்த வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படடனர். 50000 தொழிலாளர்கள் வெளியேறினார்கள். 5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் சூரத் வைரத் தொழிலில் உள்ளனர். மிக மோசமான பணி நிலைமையில்தான் அவர்கள் உள்ளனர். ஆனால் குஜராத் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. அவர்களின் கோபம் தொழிலதிபர்கள் மீது வரவில்லை. ஆனால் கோபம் வெளி நாட்டு தொழிலாளர்கள் மீதே வருகிறது. இது உலகமயத்தின் சாட்சியம். 

இது போலவே பொருளாதார பாதையின் பயன்களை அனுபவிப்பது அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்றோர். ஆனால் சாமானிய மக்களின் கோபம் நடுத்தர வர்க்கம் மீதே வெளிப்படுகிறது. 

இதுதான் தொழிற்சங்க இயக்கம் சந்திக்கிற சவால். வெவ்வேறு பிரிவு உழைப்பாளி மக்களின் வாழ்நிலை பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை தொழிற்சங்கம் உணர்த்த வேண்டும். 

எல்.ஐ.சியின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. அக்டோபரில் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் உள்ளது. ஒற்றை பிரிமியமே அதிகம் வருகிறது. கால முறை பிரிமியம் வருவதில்லை என வருத்தப்படுகிறோம். ஏன்? வசதி படைத்தோர்தான் ஒற்றை பிரிமியத்தை தாங்க முடியும். 92 சதவீத பெண் உழைப்பாளிகளும், 80 சதவீத ஆண் உழைப்பாளிகளும் மாதம் ரூ 10000 க்கு கீழே சம்பாதிக்கிறார்கள். எப்படி கால முறை பிரிமியம் அதிகமாகும்? என்றாலும் ஒற்றை பிரிமியமும் முக்கியம். ஏனெனில் " காலாவதி"  அபாயம் அதில் இல்லை. ஆனால் காலமுறை பிரிமியம் விரிவாவது சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்க வழிவகுக்கும்.

நாம் இந்த சூழலில்தான் நாம் ஊதிய உயர்வு கேட்கிறோம். ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுவது என்ன? " செலவழிக்கத் தக்க உபரி சம்பளம் வரலாற்று ரீதியான சரிவை சந்தித்துள்ளது". 
இச் சூழலில்தான் எல்.ஐ.சி வணிகத்தின் எதிர் காலம், ஊதிய உயர்வின் எதிர்காலம் பற்றி நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. 

பணி நியமனங்கள் அரசால் தடுக்கப்படுகின்றன. நிரந்தர வேலைகள் அரசால் விரும்பப்படவில்லை. 40 சதவீத மத்திய அரசு வேலைகள் நிறந்தரமற்றவை. 45 சதவீத கர்நாடக அரசு வேலைகள் நிரந்தரமற்றவை. தமிழகத்திலும் இதே போன்ற நிலைதான் இருக்குமென்று நினைக்கிறேன். ஐ.எம்.எப் வழிகாட்டல் இது? Hire and Fire. ஐ.ஏ.எஸ் அந்தஸ்திலுள்ள மத்திய அரசு துணை செயலாளர்கள் பதவிக்கே " வரையறுக்கப்பட்ட மூன்றாண்டு பணிக் காலத்திற்கு" Fixed term employment ஆக நியமிக்கப்பட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

எல்.ஐ சி ஊழியர்களின் சராசரி வயது 51. ஊழியர் சராசரி வயதே நிறுவனத்தின் வயதையும் தீர்மானிக்கிறது. செயற்கை அறிவூட்டல், பெரும் தரவு ஆகியனவும் வேலைகளை தாக்குகிற காலம் இது. மறு திறன் பயிற்சிக்கு உள்ளாக்கப்படாவிட்டால் 2030 ல் 55 சதவீத இந்திய உழைப்பாளிகள் நீடிக்க மாட்டார்கள். வங்கிகளில் ரோபோக்கள் வந்து விட்டன. 

பென்சனுக்கு மற்றுமோர் வாய்ப்பு கேட்கிறோம். ஆனால் அது பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. எல்.ஐ.சி, ஜிப்சா நிர்வாகங்கள் கூடுதல் பொருளாதார சுமையை ஏற்க முடியும் என்று தெரிவித்த பின்னரும் அரசு மறுப்பது ஏன்? சமூக பாதுகாப்பு குறித்த அரசியல் அணுகுமுறை இது. 

ஏன் அரசு மறுக்கிறது? வட்டி விகிதங்களில் வீழ்ச்சி. எல்.ஐ.சி ஊழியர் சராசரி வாழும் காலம் 85 ஐ தொட்டுள்ளது. அதிகம் வாழ்வதை பிடிக்காத அரசை நாம் சந்திக்கிறோம். 

10 நாட்களுக்கு முன்பு 50000 கைம்பெண்கள் டெல்லியில் குறைந்த பட்ச பென்ஷனை ரூ 3000 ஆக உயர்த்த கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு மாத பென்ஷன் ரூ 200. என்ன வாங்க முடியும்? எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? 

 மத்திய அரசில் 19 லட்சம், மாநில அரசின் 39 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திடடத்தை ரத்து செய்யக் கோரி வருகிறார்கள். ரிசர்வ் வங்கி, பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் பென்ஷன் குறித்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம் இக் கோரிக்கையை முன்னிறுத்துகிறது. 

ஜனவரி 8, 9 வேலைநிறுத்தம் முன்னிறுத்துகிற முதல் கோரிக்கை குறைந்த பட்ச ஊதியம் ரூ 18000 என்பதாகும். ஆகவே இயல்பாக குறைந்த பட்ச பென்ஷன் 50 சதவீதம் எனில் ரூ 9000 என்றிருக்க வேண்டும். 

விவசாயக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். 2014-17 க்கும் இடையில் 1,80,000 கோடி கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சிறு பகுதியை செலவழித்தால் விவசாயக் கடன்களை ரத்து செய்து விடலாம். ஆனால் முதலாளிகளுக்கு கடன் ரத்தும் கிடைக்கும். ரஃபேல் டீலும் கிடைக்கும். 11 லட்சம் வராக்கடன். யாருடைய பணம்? யாருடைய சேமிப்பு? யாரிடம் இருந்து பெறப்படும் வருவாய்? சுரங்கம், ஆறு, மலை, இயற்கை வளங்கள்... சாதாரண மக்களுக்கு அல்ல என்கிறது அரசு. இதற்கும் பொதுத்துறை மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லையா?5 கார்ப்பரேட் நலனுக்கான இலக்குகள்தானே இவையெல்லாமே! ஜனவரி 8, 9 மகா சங்கமம் இதை பேசப்போகிறது.

நம்பிக்கை அளிக்கின்ற நிகழ்ச்சிகளும் உண்டு. நாசிக்கில் இருந்து மும்பை வரை 40000 விவசாயிகள் நடைப் பயணம் மேற்கொண்டனர். 3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் திரண்டனர். கருத்துரிமைக்காக அறிவு ஜீவிகள் பலர் வீதிக்கு வருகிறார்கள். பல பகுதியினர் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். 

இந்த ஒற்றுமை இன்று சிதைய வேண்டுமென முயற்சிக்கிறார்கள். இன்று கர்நாடக இசை இந்து தெய்வங்களைப் பற்றி மட்டுமே பாட வேண்டும் என்கிறார்கள். கிறித்தவ, இஸ்லாமிய பாடல்களை பாடக் கூடாது என டி.எம்.கிருஷ்ணா மிரட்டப்படுகிறார். ஜுகல் பந்தியில் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும் இணைந்து இழையோடுவது எவ்வளவு இனிமையானது? அரிஹரன், உஸ்தாத் வாசித் கான் இணைந்த டூயட் " கிருஷ்ணா நீ வர வேண்டும்..." என்ற பாடலைக் கேட்டு பாருங்கள். ஏன் இசையில் மத வெறியை கொண்டு வருகிறிர்கள்? இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் ஒரே உணவு, ஒரே உடை என்று இருக்கிறார்களா? தமிழ் இந்துவுக்கும் அஸ்ஸாம் இந்துவுக்கும் இடையிலான ஒற்றுமையை விட தமிழ் இந்துவுக்கும் தமிழ் இஸ்லாமியருக்கும் இடையிலான ஒற்றுமை அதிகம். 

பிரேம்சந்த் சிறந்த இந்திய இலக்கியவாதி. 1944 ல் அவர் சொன்னார். " தூய இந்து கலாச்சாரம், இஸ்லாமியக் கலாச்சாரம், கிறித்தவ கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறதென்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனமானது". இதுவே பன்முக கலாச்சாரம். ஒன்றோடு ஒன்று ஊடாடுகிற கலாச்சாரம். 

உழைப்பாளிகளை பிரிக்கிற நிகழ்ச்சி நிரல்கள் முன்னுக்கு வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமைக்காக நமது குரல் எழ வேண்டும். மத சார்பின்மை, சன நாயகம், பொதுத் துறை, பொருளாதாரக் கோரிக்கைகள் பாதுகாக்கப்பட ஒற்றுமை தேவை என்பது சாரம். 

13 வது நூற்றாண்டு பெர்சிய கவிஞர் கூறியது முக்கியமானது. 

" எல்லா அடித்தளங்களும்  பலவீனமானவை.  
அன்பு என்ற அடித்தளம் ஒன்றே பலமானது"

மிருல்யாகுடாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர் பாலசாமியின் மகன் 23 வயதான பிரனாய் சாதி மறுப்பு திருமணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளான். தொழிற்சங்க நிகழ்ச்சி நிரலில் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பும் இணைய வேண்டும் என்பதை உணர்த்துகிற சோக நிகழ்வாகும். 

இத்தகைய விரிந்த வியூகத்தோடு முன்னேறுவோம். நமது எதிர்காலம், இயக்கத்தின் எதிர்காலம், தேசத்தின் எதிர்காலம்... எல்லாமே அத்தகைய கைகோர்ப்பினால் மட்டுமே பாதுகாக்கப்படும். 

மோடிக்கான விருதில் வில்லங்கம் . . .


தமிழிசை சௌண்டரராஜனின் (எழுத்துப் பிழை ஏதுமில்லை) அவர்களின் சீரிய முயற்சியால் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த அண்ணன் மோடிக்கு ஒரு ஆறுதல் பரிசாக தென் கொரிய அரசு அவருக்கு "சியோல் அமைதிப் பரிசு" தரப் போவதாக அறிவித்தது.

தென் ஆசியப் பகுதியில் அமைதியை நிலை நாட்டியதற்காகவும் 

மோடினாமிக்ஸ் என்று அழைக்கப்படுகிற மோடியின் அதிரடிப் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழித்து விட்டதற்காகவும் இந்தியாவில் ஏழை பணக்காரன் இடையிலான இடைவெளியை குறைத்து விட்டதற்காகவும் 

மோடிக்கு இந்த விருதை வழங்கப் போவதாகவும் அதை பெற்றுக் கொள்ள அவரும் பெருந்தன்மையோடு (இதை எழுதும் போதே சின்னத்தம்பி படத்தில் வரும் ஒரு கவுண்டமணி நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்து விட்டதால் அக்காட்சியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன். பார்த்து சிரிக்கவும்) ஒப்புக்கொண்டுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்தது.

ஆனால் தென் கொரியாவில் செயல்படும் இருபத்தி ஆறு மனித உரிமை அமைப்புக்கள் மோடிக்கு விருது வழங்குவதை கடுமையாகக் கண்டித்துள்ளன.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கலவரத்தில் கொல்லப்பட காரணமாக இருந்தவர் மோடி. அவருக்கு அமைதி விருது கொடுப்பது கொஞ்சம் கூட பொருத்தமற்ற செயல்.

ஏதாவது காரணம் சொல்லி போர் தொடுக்க முடியுமா என்று தெற்கு ஆசியப் பகுதியை பதட்டத்திலேயே வைத்துள்ளார் மோடி.

மோடினாமிக்ஸ் என்பது மிகப் பெரிய தோல்வி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பலனும் கிடைக்கவில்லை. அது உருவாக்கிய பாதிப்புக்கள்தான் அதிகம்.

ஏழை பணக்காரன் மத்தியிலான இடைவெளி குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது.  இந்திய மக்கட்தொகையில் ஒரு சதவிகிதம் உள்ளவர்களிடம் இந்திய செல்வத்தில் 58 % உள்ளது,  அவர்களின் செல்வம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 73 % உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்போம் அறிக்கை சொல்கிறது.

ஆகவே மோடிக்கு விருது கொடுப்பதென்பது சியோல் அமைதி விருதையும் இதற்கு முன்பு அந்த விருதைப் பெற்றவர்களையும் இழிவு படுத்துவதாகும்.

எனவே மோடிக்கு சியோல் அமைதி விருது அளிக்கக் கூடாது. 

அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

ஆகவே, வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மோடி சியோல் அமைதிப் பரிசு எனக்கு வேண்டாம் என்று அறிவிப்பார் என எதிர்பார்ப்போம். 

Saturday, October 27, 2018

குளிக்க முடியாவிட்டாலும் . . .

குமரி பயணத்தின் போது மாத்தூர் தொட்டிப் பாலத்தை பார்த்து முடித்ததும் வாகன ஓட்டுனர்

'இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம்தான் திற்பரப்பு அருவி, போய் வரலமா சார்"

என்று கேட்க

அருவிகளின் காதலனான நான் எப்படி வேண்டாமென்று சொல்வேன்!

கார் வேகமாய் பயணித்தது.

பார்க்கிங்கில் காரை நிறுத்துகையிலேயே அருவி ஆர்ப்பரிக்கும் ஓசை கேட்டது.

காரை விட்டு இறங்கிய உடன் ஒரு பெரிய பேனர் கண்ணில் பட்டது.

அருவியின் வேகம் அதிகமாக இருப்பதால் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பரவாயில்லை

பார்வைக்கு அருமையான விருந்து . . .
சலசலவென்று வீசிய தென்றலும் 
குளிர்ந்தும் குளிராத சூழலும்

மனதுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இன்னொரு முறை வந்து குளித்தால் போகிறது என்று
வேகமாக விழுந்து எழுந்து போன அருவியை
கேமராவில் சிறைப்படுத்திக் கொண்டு புறப்பட்டோம்.


















ஒரு முட்டாளின் மிரட்டல் . . .


Metoo சபாஷ் மியூசிக் அகாடெமி என்று இரண்டு நாட்கள் முன்பாக எழுதிய பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை கீழே தந்துள்ளேன்.

ன்னா காம்ரேட், ஒங்களுக்கு விசயம் புரியலயா! இல்ல, புரியாதமாதிரி நடிக்கிறீர்களா! உதாரணத்துக்கு ஒரு அழகான சங்கி-மங்கி சகோதரி உங்கள்மேல் பாலியல் குற்றச்சாட்டு சொன்னால் அதை மவுனமாக எற்றுக்கொண்டு LIC சங்க பணியிலிருந்து விலகிவிடுவீர்களா. (LIC ஊழியர் பணியிலிருந்து விலகி விடுமாறு கோருவது அராஜகம்!).

என்னோட LIC policy claimல பிரச்சனை இருந்தது அதை clear பண்ணுவதற்காக LIC ஊழியர் சங்கத்தலைவர், வேலூர் 'ராமனை' சந்திக்க சொன்னார்கள். அவர் அவசரமாக சங்க meetingகு கொல்கட்டா செலல விருப்பதாகவும் அங்கு வந்து சந்தித்தால் 'வேலையை' நல்லபடியாக முடித்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தார். ஆதன்படி அவரை கொல்கட்டா சென்று சந்தித்த பொழுது விக்டோரியா மாளிகை தோட்டத்தில் வைத்து என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று ஒரு பெண் 'சீக்கிரமே' உங்கள் மேல் பாலியல் குற்றம் சாட்டலாம். Be ready, comrade!

உங்களுக்கு வருவது ரத்தமா! அல்லது தக்காளி சட்னியா!! என அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தோழன்
ReplyDelete

இந்த பின்னூட்டத்திற்கு பதிலடி கொடுத்து விட்டேன்.


இதைப் படிக்கையில்  எனக்கு தோன்றிய சில உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்கே தன் மீது Metoo வந்து விடுமோ என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் கடந்த கால குற்றவாளிகளுக்கு அந்த இயக்கத்தை ஆதரிக்கும் ஆண்கள் மீது எரிச்சல் வருவது இயல்பானதே. அப்படிப்பட்ட ஒரு பசுத்தோல் போர்த்திக் கொண்டு உலாவும் ஒரு ஓநாயின் பின்னூட்டமாகவே இதைக் கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எனது தொழிற்சங்கப் பொறுப்பும் அந்த அனாமதேயத்திற்கு ஏனோ வெறுப்பை உருவாக்கியுள்ளது போல. அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அந்த அளவிற்கு அது வொர்த் இல்லை. அது சங்கியின் பின்னூட்டமல்ல என்பது தெளிவு. 

உண்மையில் அந்த பின்னூட்டம் எனக்கு மிகப் பெரிய சிரிப்பையே அளித்தது. 

என் மீது யாரை வைத்தாவது புகார் அளிக்க வைப்பேன், அதை சந்திக்க தயாராக இரு என்று எச்சரிக்கிற அந்த அனாமதேயம் அதை இப்படியா பொது வெளியில் பதிவு செய்யும்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். சிலர் பிறவி முட்டாளாகவே இருக்கிறார்களே! 

இதை படிக்கிற போது இன்னொரு சம்பவமும் எனக்கு நினைவு வந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நல்லவன் "நான் நினைத்தால் அவரை சாட்சி இல்லாமலேயே கொலை செய்வேன்" என்று சில தோழர்களிடம் வெட்டி பந்தா செய்துள்ளான்.  அதான் எங்க கிட்ட சொல்லிட்டயே என்று அவர்கள் பதில் அளித்த போது அவ்வை சண்முகி மணிவண்ணன் போல அசடு வழிந்திருக்கிறான்.

இவர்கள் எல்லாம்  தங்களை தனி ஒருவன் அரவிந்த்சாமி போல பெரிய புத்திசாலி வில்லன் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். 

ஆனால் மேலே உள்ள காமெடி வில்லன்கள் அளவிற்குக் கூட வொர்த் இல்லாத முட்டாள்கள் என்பது ஏனோ அவர்களுக்கு புரிவதில்லை. 

பிகு:

கொல்கத்தா விக்டோரியா நினைவக தோட்டத்தை பின்னூட்டத்தில் கொண்டு வந்து மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்காத அந்த அனாமதேயத்திற்காக நான் அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஏதாவது போட்டோஷாப் செய்ய வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளட்டும். 






Friday, October 26, 2018

என்னய்யா கவர்னரு நீ ?




உன்னை எதுக்கய்யா காஷ்மீருக்கு அனுப்பிச்சோம்?

காஷ்மீரில அரசாங்கம் இல்லை. ஆனா சட்டசபையை கலைக்கலை. மெஹபூபா கட்சியிலிருந்து பத்து எம்.எல்.ஏ, ஓமர் அப்துல்லா கட்சியிலிருந்து பத்து எம்.எல்.ஏ, காங்கிரஸை உடைச்சு ஐந்து எ.எல்.ஏ, எல்லாரையும் பாஜகவுல சேர்த்து அங்கே பாஜக அரசாங்கத்தை உருவாக்கனுங்கறதுதானே உன் வேலை?

ஆனா நீ என்ன செய்யற?

அனில் அம்பானியோட இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கொடுத்த அரசு ஊழியர் மெடிக்ளெய்ம் பாலிசியில ஊழல்னு சொல்லி அந்த திட்டத்தையே ரத்து செஞ்சுட்ட.

அம்பானின்னாலே அதுல விவகாரம் இருக்கும். அதை கண்டுக்காம போயிடனும்னு கூட தெரியாத அளவுக்கு நீ என்ன பச்சைக்குழுந்தையா?  நாங்க போட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பார்த்தாவது அம்பானி கிட்ட எப்படி நடந்துக்கனும்னு புரிஞ்சுக்கிட வேண்டாம்!

ஆமாய்யா, அம்பானின்னாலே ஊழல்தான். அவங்க வேற, நாம வேறய்யா! எல்லாமே ஒன்னுக்குள்ள ஒன்னுதானய்யா!

நீயா பிரிமியம் கட்டப் போற? இளிச்சவாய் அரசு ஊழியந்தானே? உனக்கென்ன கெட்டு போச்சி?

ஸ்டேட் பேங்கில இருந்த போது கடன் கொடுத்துட்டு அப்பறம் அம்பானி கிட்டயே வேலைக்கு சேந்தாங்களே அருந்ததி அம்மையார், அவங்களை பாத்து பிழைக்கக் கத்துக்க! நீ மட்டும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உன்னை அனில் அம்பானி அப்படியே குளிப்பாட்டியிருப்பான். அதை விட்டுட்டு ஊழல், ஹைகோர்ட்டு அப்படியெல்லாம் பேசியிருக்க.

இந்த மாதிரி அதிகப்பிரசங்கி வேலையெல்லாம் செய்யாம, ஒழுங்கா கட்சிகளை உடைச்சு நம்ம அரசாங்கத்தை உருவாக்கப் பாரு. தேர்தல் நடத்தனும், அது இது அப்படியெல்லாம் கடிதம் எழுதப்படாது, மக்கள் கிட்ட போய் நீயா ஓட்டு கேக்கப் போற! நாங்கதான்யா மாரடிக்கனும்.

எப்படி கவர்னரா பொறுப்பா இருக்கனும்னு பன்வாரிலால் புரோஹித் கிட்ட கத்துக்க! எவ்வளவு ஜாலியா இருக்காரு பாரு!

நமக்கு பிடிக்காத கட்சி ஆட்சியில இருந்தா அவங்களை எப்படி டார்ச்சர் செய்யனும்னு கிரண் பேடியைப் பார்த்து தெரிஞ்சுக்க!

பிகு

ஜம்முகாஷ்மீர் அரசு ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. முறைகேடுகள் ஏராளம் என்று சொல்லி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அம்மாநில ஆளுனர் சத்யபால் மாலிக்கிடம் மோடி எப்படி பேசியிருப்பார் என்று யோசித்தேன்.

இதைத்தவிர வேறெப்படி மோடியால் பேச முடியும்!

Thursday, October 25, 2018

மனசாட்சியுடன் ஒரு மன்னிப்பு - நதியிடத்தில் . . .




எங்களின் நெல்லைக் கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் பி,முத்துக்குமாரசாமி அவர்களின் முக நூல் பதிவு அருமையாக இருந்தது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தாமிரபரணி புஷ்கரம் முடிந்து வழக்கம் போல்(?) ஓடிக்கொண்டு இருக்கிறது நதி. நேற்று என் கனவில் வந்தாள் தாமிரபரணி. நதியோடு 40 ஆண்டுகளாய் உயிரோட்டமான தொடர்பு உண்டு எனக்கு. அது மட்டுமல்ல அவள் மீது சமூகம் வன்முறை நிகழ்த்திய போது (கோக் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயன்ற போது, அவளது இதயத்தை குத்தி கிழித்து மணலை கொள்ளையடித்தபோது, அவள் மீது அசுத்தங்களை கலந்த போது...) எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்றவன் எனும் நெருக்கத்தில் கனவில் வந்திருக்கலாம். அவள் கேட்டதில் இருந்து....

* நான் கதற கதற மணல் எடுக்காமல் இனியாவது இருப்பீர்களா....?

* என்னை அயல் நாட்டு கம்பெனிகளுக்கு விற்காமல் இருப்பீர்களா...?

* தொடர்ந்து மக்களை வஞ்சிப்பவனும் சமூக விரோதிகளும் வந்து குளிக்கும் போது அருவருப்பாய் உணர்ந்தேன். ஒரு நாளுக்கே எனக்கு இப்படி என்றால் காலம் முழுவதும் எப்படி அவர்களை சகித்து வாழுகிறீர்கள்? குறைந்தபட்சம் கோபம் கூட உங்களிடம் இல்லையே!....

* சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 13 பேர்களை கொலை செய்தவர்களின் பாவம் புஷ்கரணியில் போய்விட்ட்தா?

கடைசியில் எனக்கும் குறிப்பிட்டவர்களுக்கான சாயத்தை பூசிட்டீங்களேடா......

கனவு கலைந்து விட்டது. மழை நேரமானாலும் உண்மை சூட்டெரிக்கிறது. அவளை பார்த்து மன்னிப்பு கேட்க கிளம்பினேன்.