பீமா கொரேகான் வழக்கு ஒரு பொய் வழக்கு. இந்த வழக்கின் அடிப்படையாகச் சொல்லப்பட்ட ஒரு மின்னஞ்சல் அரசு பயங்கரவாத அமைப்புக்கள் செய்தது என்பது நிரூபணமாகி விட்டது.
செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக போடப்பட்ட பொய் வழக்கு என்பதால்தான் இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல் ஏமாற்றி வருகிறது.
திரு ஸ்டான் சாமி, உடல் நலக்குறைவால் இறக்கவில்லை. அவர் இறக்கும் சூழலை உருவாக்கியதால் இது ஒன்றிய அரசு செய்த படுகொலை என்று சொன்னால் அது பொருத்தமாகவே இருக்கும்.
மோடியின் ஆட்சி இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறதோ?
//இந்த வழக்கின் அடிப்படையாகச் சொல்லப்பட்ட ஒரு மின்னஞ்சல் அரசு பயங்கரவாத அமைப்புக்கள் செய்தது என்பது நிரூபணமாகி விட்டது.// எந்த கோர்ட்டில் அது நிருபிக்கபட்டது என்று சொன்னால் நன்றாக இருக்கும். இவங்களே ஒரு பொய் சொல்வாங்களாம், அதையே திரும்ப திரும்ப சொல்வ்வாங்களாம். அதையே சில நாட்கள் கழித்து உண்மை என்று சொல்வார்களாம். உங்க வயதுக்கும் அனுபவத்திற்க்கும் இப்படி பொய் சொல்லி ஏமாற்றுவது முறையா?
ReplyDeleteஅடையாளத்தை மறைத்துக் கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்வதில்லை.
Delete