Thursday, July 22, 2021

நடிகர் திலகம் 3+3

 



 நேற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளன்றே எழுதி இருக்க வேண்டிய பதிவு. வேறு சில பணிகள் காரணமாக இயலவில்லை.

அவரைப் பற்றி புதிதாக  என்ன எழுத?

விபரம் தெரிந்த நாள் முதல் அவர் படங்களை ஆவலாக பார்த்த ரசிகனாக அவர் நடித்த காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பார்த்தால் மட்டும் போதுமே!

அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தின் இடம் போதாது என்பதால் மூன்று காட்சிகளும் மூன்று பாடல்களும் பகிர்ந்து கொள்கிறேன்.

கம்பீர நடைக்கு ஓர் உதாரணம்.  தேவேந்திரன் தன்னை வஞ்சிக்க மாறு வேடத்தில் வந்திருப்பதை அறிந்ததும் முகத்தில் காண்பிக்கிற கர்ணன்.


 

பணி ஓய்வை எதிர்பாராததால் எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் தவிக்கும் பிரெஸ்டீஜ் பத்மநாபன்

 


கிராமந்து வெள்ளந்தியான சாப்பாட்டு ராமன்.

 


இன்றைய இந்தியா உயர்த்திப் பிடிக்க வேண்டிய மத நல்லிணக்கத்தை வலியுறுத்த முத்தான மூன்று பாடல்கள் உங்களுக்காக.

 









திரை இசை திலகம், மெல்லிசை மன்னர்கள், இசை ஞானி என மூவரின் கைவண்ணத்தில் இந்த மூன்று பாடல்கள் அமைந்துள்ளன என்பது இன்னொரு சிறப்பு.

 இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களே அவர் சிறப்பைச் சொல்லும். ஒன்பது வேடங்களில் தோன்றிய நவராத்திரி படத்தின் காட்சிகளையும் அரசர் வேடத்தில் தோன்றிய காட்சிகளையும் கொஞ்சம் மெனக்கெட்டு தொகுத்திருந்தேன். இவ்வளவு வித்தியாசம் வேறு யார் காண்பித்துள்ளார்கள்!

நடிகர் திலகம் என்றுமே நம் தமிழ் நாட்டின் பெருமை.

No comments:

Post a Comment