தமிழ்நாடு அரசு முதல் "தகைசால் தமிழர்" விருதை நூற்றாண்டு காணும் மூத்த பொதுவுடமை இயக்க தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு அளித்து விருதுக்கு பெருமை சேர்த்துள்ளது.
மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் சிக்ஸர் என்று கொண்டாடுவார்கள். மற்ற நடவடிக்கைகள் எப்படியோ, இது நிச்சயம் சிக்ஸர்தான்.
எதிர்காலத்திலும் தோழர் என்.எஸ் போன்றவர்களுக்கே அளிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் அரசு தனக்கு தானே உருவாக்கிக் கொண்டுள்ளது.
விருதோடு அளிக்கப்பட்ட தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கே அளித்து மேலும் உயர்ந்து நிற்கிறார் தோழர் என்.எஸ்.
No comments:
Post a Comment