Friday, July 2, 2021

பிடேனை விஞ்சினாரா மோடி?



*நாளொரு கேள்வி: 30.06.2021*

வரிசை எண்: *395*

இன்று நம்மோடு தஞ்சாவூர் கோட்டக் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வயதுக்கும் வாசிப்புக்கும் - வயதுக்கும் எழுத்துப் பணிக்கும் முரண் இல்லை என்பதற்கான நிரூபணம் ஆகத் திகழ்பவருமான *கி.இலக்குவன்*
#########################

*அமெரிக்காவை விஞ்சி விட்டோமா!*

*கேள்வி:*
தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை மிஞ்சிவிட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதே இது சரியா?

*கி. இலக்குவன்*




வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் இது சரியே. 

அமெரிக்கா செலுத்தியுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை *32.33 கோடி.* இந்தியாவின் எண்ணிக்கை *32.36 கோடி*

ஆனால் இந்த புள்ளி விவரம் உணமையை சொல்லாது. ஒரு தேசத்தின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அதில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்பதுதான் *விஞ்சுவதற்கும், மிஞ்சுவதற்கும் அளவுகோல்.* 

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இரண்டு டோஸ்களையும் போட்டிருப்பது எத்தனை சதவீதம் பேர்?  அமெரிக்கா தனது  மக்கள்தொகையில் 46.62 சதம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது இன்னமும் 53.38 % பேருக்கு அது தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதேநேரத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் 4% பேர்களுக்குத்தான் தடுப்பூசிகளைச்  செலுத்தியுள்ளது. ஆக இன்னமும் 96 சதம் பேர்கள் பாக்கியுள்ளனர் *இதுதான் உண்மை நிலை. 46% எங்கே! 4% எங்கே! அமெரிக்கா ஜஸ்ட் பாஸ் என்றால் இந்தியா கடைசி பெஞ்ச் என்று அர்த்தம்.*

அமெரிக்கா மட்டுமல்ல *கிரேட் பிரிட்டன், பிரேசில்* போன்ற நாடுகளும் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவை விடக் குறைவான ஊசிகளையே செலுத்தியுள்ளன. *கிரேட் பிரிட்டன் 3.25 கோடி ஊசிகளை செலுத்தியுள்ளது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் 48.7 சதம் பேர்.* அமெரிக்காவை விட சதவீதம் அதிகம்.

பிரேசிலின் மக்கள் தொகையில 12.1 சதம் பேருக்கு செலுத்தப்பட்ட ஊசிகளின் எண்ணிக்கை 2.56 கோடி மட்டுமே. ஆக எத்தனை கோடி ஊசி செலுத்தினீர்கள் என்பது அளவுகோல் அல்ல. மக்கள் தொகையில் எத்தனை சதம் பேருக்கு ஊசி செலுத்தியுள்ளீர்கள் என்பதுதான் அளவுகோல். அதுதான் தொற்றை கட்டுப்படுத்த உதவும்.

இப்படி உண்மை இருக்க அமெரிக்காவை முந்தி விட்டோம் என்று பீற்றிக் கொள்வது ஏமாற்று வேலை அன்றி வேறு என்ன?

******************
*செவ்வானம்*

No comments:

Post a Comment