Saturday, July 3, 2021

பதவியை பறி கொடுத்த முதல்வர்



பாஜக ஆளும் உத்தர்கண்டில் உட்கட்சி மோதல் காரணமாக திரிவேந்திர சிங் ராவத் என்பவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு திரிவாத் சிங் ராவத் என்பவர் முதலமைச்சரானார். 

அவர் நேற்று பதவி விலகி விட்டார்.

என்ன காரணம்.

இரண்டாம் ராவத். எம்.எல்.ஏ கிடையாது. இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இல்லாததால் ஆறு மாதத்திற்குள் எம்.எல்.ஏ ஆக முடியாது. எனவே ராஜினாமா என்று சொல்கிறார்கள்.

இந்த காரணம் நிஜமா?

கங்கோத்ரி என்ற தொகுதி காலியாகத்தான் உள்ளதாம். ஆனால் அங்கே நின்றால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாதாம்.

வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளின் எம்.எல்.ஏ க்களை ராஜினாமா செய்யச் சொன்னால் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அதனால் பாவம் இரண்டாம் ராவத் நான்கே மாதத்தில் முன்னாள் முதல்வராக மாறுகிறார்.

தேர்தல் ஆணையத்தின் மீதுதான் குறை சொல்கிறார்.

பாவம் வேறென்ன சொல்ல முடியும்!

சொந்த கட்சி எம்.எல்.ஏ க்களே அவர் பதவியை பறித்து விட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்!

பிகு: ஹரித்வார் கும்பமேளா கோவிட் புகழ் முதல்வர் இந்த இரண்டாம் ராவத்

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயமா வராம அடையாளத்தோட வாடா கோழையே.

      Delete