இந்திய
தேசத்தின் விடுதலைக்காகவும் இந்திய உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் அடிமை இந்தியாவிலும்
சுதந்திர இந்தியாவிலுமாக எட்டு வருட சிறை வாழ்க்கை, மூன்று வருட தலை மறைவு வாழ்க்கை,
எண்பது வருட பொது வாழ்வு என தன் வாழ்வையே மக்களுக்கு அர்ப்பணித்துள்ள மகத்தான தலைவர்
தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இன்று நூறாவது வயதை தொட்டுள்ளார்.
தியாகத்தின்
வடிவம்,
மார்க்சிய
ஞானத்தின் இருப்பிடம்,
போராட்ட
உணர்விற்கோர் முன்னுதாரணம்.
விவசாயிகளின்
தோழர்,
தொழிலாளிகளின் நண்பர்,
தமிழ் ஆர்வலர்,
அற்புதமான
மனித நேயர்,
கடினமான உழைப்பாளி,
மூன்று
முறை தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டவர்,
தீக்கதிர்
நாளிதழின் முதல் ஆசிரியர்,
விவசாயிகள்
சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்டவர்.
சிங்கத்தின்
கர்ஜனையாக இப்போதும் ஒலிக்கும் கம்பீரக் குரல்
வாணியம்பாடி
தொகுதியில் ஒரு முறை இடைத்தேர்தல் நடந்த போது வேலூர் வழியாக பிரச்சாரத்திற்கு சென்று
கொண்டிருந்த தோழர் என்.எஸ் அவர்களை எங்கள் தோழர்கள் மத்தியில் உரையாற்ற வைத்த நல்லதொரு
தருணத்தில் எடுத்தது முதல் புகைப்படம்.
2006
சட்டப்பேரவைத் தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் தோழர்களுடன் சந்தித்த வேளையில்
எடுத்தது இரண்டாவது புகைப்படம்.
No comments:
Post a Comment