அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு மாநிலங்களின் எல்லையில் நேற்று நடந்த மோதலில் அஸ்ஸாம் காவல் துறையின் ஆறு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிசோரம் மக்கள் அல்ல, மிசோரம் மாநில காவலர்கள்.
மிசோரம் மாநில எல்லை கிராமத்துக்குள் நுழைந்து அங்கே இருந்த சி.ஆர்.பி.ஃஎப் அவுட் போஸ்டை உடைத்தெறிந்து கலவரம் செய்ததால் நாங்கள் திருப்பித் தாக்கினோம் என்று சொல்கிறது மிசோரம் காவல் துறை.
இந்த மோதலைத் தவிர இரண்டு மாநில காவல் துறை தலைவர்கள் ட்விட்டரில் வேறு மோதிக் கொண்டார்கள்.
ஏன் திடீரென்று இப்படி ஒரு மோதல்?
இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.
அந்த அமைதிப் பேச்சு வார்த்தையின் விளைவுதான் நேற்றைய ரத்தக் களறி.
பிறகு
இன்னொரு செய்தியும் உள்ளது.
அஸ்ஸாமின் ஆளும் கட்சி பாரதீய ஜனதா.
மிசோரமின் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினர்.
வேறு ஒரு செய்தியையும் மறக்கக் கூடாது.
நாடாளுமன்றத்தில் ஒட்டு கேட்ட பிரச்சினையால் அன்றாடம் அமளி நடக்கிறது. உ.பி க்கு வேறு தேர்தல் வருகிறது.
சடலங்களின் மீது வாக்கு கேட்கும் கேவலமான கட்சியல்லவா பாஜக!
No comments:
Post a Comment