Wednesday, July 14, 2021

விஜய் என்பதால்தானா?

 


பாஜகவின் கருநாகப் பாம்பு கரு.நாகராஜன் நீட் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த குழு செல்லாது என்று  தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த முக்கியத் தகவலை பின்னுக்குத் தள்ளியது விஜய் தொடுத்த வரி வழக்கு.

செல்வந்தர்கள் வரி விலக்கு கேட்பது என்பதை எந்நாளும் ஏற்க முடியாது. சச்சினோ, ரஜினியோ, விஜய்யோ, அம்பானி, அதானி வகையறாக்களோ யாராக இருப்பினும் தவறு தவறுதான். விஜய் வரி விலக்கு கேட்டு வழக்கு போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் மாண்புமிகு நீதியரசர் தெரிவித்த பல கருத்துக்கள்.

ஒற்றை வரியில் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒரு வழக்கை ஒன்பது வருடங்கள் இழுக்க முடியும் என்ற அளவில் நம் நீதி பரிபாலன அமைப்பு இருப்பது யார் குற்றம்?

நீதித்துறையுடையதா? விஜயுடையதா?

ரீல் ஹீரோக்கள், திரையில் சமூக நீதி பேசுபவர்கள், என்ன தொழில் செய்கிறார் என்பதை மனுவில் கொடுக்கவில்லை, இன்னும் இதர, இதர வாசகங்கள் தீர்ப்பில் அவசியமா?

திரையில் சமூக நீதி பேசுவது முட்டாள் சங்கிகளுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். சமூக நீதியை நிலை நாட்ட வேண்டிய கடமையில் உள்ள நீதியரசர் எரிச்சல் படுவது நியாயமாக இருக்குமா?

வரி விலக்கு கேட்ட வழக்கில் அமிதாப் தன்னை விவசாயி என்று சொன்னதும் திரைக் கலைஞர் என்று சச்சின் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. அப்படி தவறாக சொல்லியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. 

நீதித்துறை காவிமயமாகி பல ஆண்டுகளாகி விட்டது என்ற குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாகவே இத்தீர்ப்பில் அவசியமற்ற வாசகங்கள் உள்ளதோ என்று ஐயம் எழுவதை தடுக்க இயலவில்லையே! என் செய்வது?

இப்படிப்பட்ட கடுமையான வரிகளை தீர்ப்பிலிருந்து அகற்றுவதே முறையாக இருக்கும்!

2 comments:

  1. Naalai marunaal mudhalvar Vijay (naalaya mudhalvar rajini)thaana covid samayathula master padam release pannum podhu 100% capacity'la padam release panna try panna uthama puthirar. Thapu panravana judge eppadi kazhuvi oothinaal enna. Nallathuthaan.

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக் சங்கி முட்டாள்கள் மொழியில் நீதிபதி பேசக்கூடாது. சட்டத்தின் மொழியில்தான் அவர் பேச வேண்டும்

      Delete