Wednesday, July 7, 2021

சங்கி மூடர்களுக்கு புரியாது


அர்பன் நக்ஸல்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் மோடி அரசு தனது கையாலாகததனத்தை திசை திருப்ப,  தன்னை எதிர்ப்பவர்களை இழிவு படுத்தும் இழிவான சிந்தனையில் பயன்படுத்துகிறது என்பதை தெளிவாக விளக்கும் பதிவு இது.

அர்பன் நக்ஸல் என்ற வார்த்தையை பயன்படுத்தும் சங்கிகளுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை. அறிவு இருந்தால் அந்த மூடர்கள் ஏன் மோடியை நம்புவார்கள்!

மோடியை நம்பும் மூடர் கூட்டத்திற்கு அவர்களின் சாவின் போது கூட புத்தி வராது.



 *நாளொரு கேள்வி:*

*07. 07. 2021*

வரிசை எண் : *402*

*சிறை‌யி‌ல் உயிர் நீத்துள்ள அருட் தந்தை ஸ்டேன்ஸ் சுவாமிக்கு அஞ்சலி*

இன்று நம்மோடு பொருளாதார நிபுணர் *பிரபாத் பட்நாயக்* (2018ல்  மறைந்த இ. எம். ஜோசப் அவர்கள் தமிழில் தந்த கட்டுரையின் சுருக்கம். இன்றும் பொருந்துகிறது)
##########################

*எதிர்க் கருத்தாளர்களை இழிவு செய்தல்*

*கேள்வி:* அறிவார்ந்த கருத்துக்களை முன் வைப்பவர்கள் தேச விரோதிகள், அர்பன் நக்சல்கள் என்று அழைக்கப்படுவதன் பின்புலம் என்ன? 

*பிரபாத் பட்நாயக்*

மோடி அரசு தனது அரசுக்கு எதிரான எந்த விமர்சனத்தையும் விரும்புவது இல்லை. இந்தப் பின்னணியில், *அவரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் அறிவாளர்களை, அறிவுத் தளத்தில் சந்திக்க இயலாத மோடி அரசு, அவர்களுக்கு அவப்பெயர் சூட்டி அசிங்கப்படுத்தி விட்டால், மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும், அதன் விளைவாக அவர்களது கருத்துக்களும் மதிப்பில்லாமல் போய் விடும்* என்ற எதிர்பார்ப்பில், இப்போது அவர்களை குறி வைத்துத் தாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. 

அண்மையில் பிரதமர் மோடி, *“அர்பன் நக்சல்ஸ்”* (நகர நக்சலைட்டுகள்)  குளிர்சாதன அறைகளில் வசதியாக வாழ்பவர்கள் என கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். பொதுவெளியில் இந்துத்துவா கருத்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் இவரது கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர். இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அறிவாளர்களும் நாட்டில் சிலர் உண்டு. ஆனால், அவர்கள் மோடி அரசினையும் விமர்சனம் செய்பவர்கள் என்றால் அவர்களும் அர்பன் நக்சலைட்டுகளே. *மொத்தத்தில் மோடியின் அகராதியில், அறிவாளர்கள் (Intelligentia) அனைவருமே அர்பன் நக்சல்கள் தான்.* வசதியாக வாழ்கின்ற இவர்களுக்கு மக்கள் மீது என்ன அக்கறை இருக்க முடியும் எனக் கூறி, அவர்களை மக்கள் மனதில் மதிப்பிழக்க வைப்பதே அந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கும் நோக்கம்.     

மூன்று வகையான  அபத்தங்கள் அரங்கேறுகின்றன. 

*ஒன்று*, அர்பன் நக்சல்கள் என்ற பெயரில், கைதானவர்களில் பலரும் மனித உரிமை ஆர்வலர்கள். இவர்கள், வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி மக்கள், விளிம்பு நிலை மக்கள் ஆகியோருடன் இணைந்து, வாழ்க்கைச் சிரமங்கள் பலவற்றைத் தாங்கி வாழ்ந்து வருகின்றவர்கள். இவர்களில் பலர் இயல்பாகவே இடதுசாரி அரசியல் பின்னணியும் கொண்டவர்கள். இவர்களது வாழ்க்கைக்கும், குளிர்சாதன வாழ்க்கை வசதிக்கும் தொடர்பு ஏதேனும் உண்டா? 

*இரண்டாவதாக*, மோடி தான் சொல்வதையும், தனது பெருமுதலாளி நண்பர்கள், கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்வதையும் மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், இவர்களில் யாரேனும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? “குளிர்சாதன வசதியில் வாழ்பவர்கள்”  என்ற குற்றச்சாட்டு, இந்நாட்டில் இருக்கும் பலரை விட, இவர்களதுக்குத்தானே அதிகம் பொருந்தும்?  *பிரதமரின் கார்ப்பரேட் நண்பர்களில்  ஒருவர்* மும்பை நகரில் பல மாடிகளுடன் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறாரே? அவருக்கு எல்லாம் இது பொருந்தாதா? இதுவெல்லாம் மக்கள் அறியாததா?       

*மூன்றாவதாகவும்*, முக்கியமானதுவுமான காரணம் ஒன்றும் இருக்கிறது. ஒரு மனிதன் அறிவு ரீதியாக எழுப்பும் ஒரு விஷயத்தினை ஏற்றுக் கொள்வதற்கும், புறந்தள்ளுவதற்கும்,  அவர்களின் வாழ்நிலை அந்தஸ்தினை அடிப்படையாகக் கொள்ள முடியுமா? அவர்களை அறிவுத்தளத்தில் சந்திக்க வக்கற்றவர்கள் தானே அப்படி முடிவு செய்வார்கள்?  

*வலதுசாரி இயக்கங்கள் அனைத்துமே எதிர்க் கருத்துக்களைச் சந்திப்பதில் இத்தகைய அணுகுமுறையினையே கையாளுகின்றன.* தங்களுக்கு பிடிக்காத கருத்துக்களை, கருத்து ரீதியாக சந்திக்க இயலாத நிலையில், எதிர்க் கருத்தாளர்களை இழிவு படுத்தும் வேலையில் இறங்குகின்றன. 

வலதுசாரிகளிடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அறிவாளர்கள் எவரும் இல்லை எனத் தெரிகிறது. அப்படி இருந்தால், அவர்கள் அறிவுத்தளத்தில் எதிர் வாதம் நடத்தி இருப்பார்கள் அல்லவா?  தங்களை எதிர்க்கும் அறிவாளர்களை அழிக்கும் பணியில், *மொத்தத்தில் அறிவுத்தளத்தினையே (intellection) அழிக்கும் வேலையினைச் வலதுசாரிகள் செய்து வருகின்றனர்.* 

வலதுசாரிகளிடம் அறிவாளர்கள் இல்லாததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.   ஏனெனில், அறிவுத்தளம் என்பது கேள்விகளை எழுப்பி விவாதம் செய்வதற்கான தளம். *ஒரு மதவெறி இயக்கத்தில் இதுவெல்லாம் சாத்தியம் அல்ல.* “தலைவர்” சொல்வதை ஏற்று பரப்புரை செய்வதைத் தவிர அங்கிருப்பவர்களுக்கு வேறு வேலை இல்லை. அங்கு கேள்விகளை எழுப்ப முடியாது. அத்தகைய நிலையில், அறிவாளர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்க முடியும்? 

******************
*செவ்வானம்*

2 comments:

  1. சங்கிகளில் நல்லவர்களே கிடையாதா? எல்லோரும் முட்டாள்கள்தானா?

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்கள் மட்டுமல்ல அயோக்கியர்களும் உள்ளார்கள்

      Delete