காவிக்கயவர்களுக்கு தாஜ் மகால் எப்போதுமே எரிச்சலூட்டும். அங்கே சிவன் கோயில் இருந்ததாய் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கூட அது போன்றதொரு அபத்தமான செய்தி முகநூலில் உலவிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் யாரோ ஒரு மரியாதைக்குரிய நீதியரசர் தாஜ்மகாலுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் ஒரு முத்தான கருத்தை உதிர்த்துள்ளார்.
அவரால் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை, ஒரு ஏரியை அழித்து உருவாக்கப்பட்ட உதாரணத்தை சொல்லி இருக்கலாம்.
விழுப்புரம் பேருந்து நிலையம், அதன் அருகில் உள்ள மாவட்ட நீதிமன்றம் எல்லாமே ஒரு ஏரியின் மீது கட்டப்பட்ட கல்லறைதான் என்று சொல்லி இருக்கலாம்.
ஆனால் தாஜ் மகாலை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
வொய் திஸ் கொலை வெறி யுவர் ஆனர்?
ஆனால் உங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் கிடையாது. யுனெஸ்கோ சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்ட தாஜ்மகாலை உங்களால் இடிக்க முடியாது.
ஒரு வேளை நீங்கள் தாஜ் மகாலைப் பார்த்திருந்தால் அது யமுனை நதியின் கரையில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதையும் அதனை ஆக்கிரமிக்கும் புவியியல் சூழல் கிடையாது என்பதை புரிந்து கொண்டிருப்பார்.
சங்கிகள் பாணியில் பேசினால் நாம் வேறு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கும். நீங்க நீதிமன்ற அவமதிப்புன்னு சொல்வீங்க . . .
No comments:
Post a Comment