அந்த காலத்தில் ஹோட்டல்களில் இருந்த விலைவாசி நிலவரத்தை இந்த விளம்பரச் சீட்டு சொல்கிறது.
இதிலே நான் கவனித்த சில விஷயங்கள்.
இட்லி, தோசை ஆகிய பண்டங்களே இல்லை.
கறி பிரியாணியை விட முட்டை பிரியாணி விலை அதிகம்.
உப்புமா உணவு விடுதிகளில் கிடைத்துள்ளது.
இரண்டு பூரிகளின் விலையைப் போல் உப்புமாவிற்கு இரட்டிப்பு விலை.
சர்க்கரை பொங்கல் கூட எப்போதும் கிடைத்துள்ளது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் போது நினைவுக்கு வந்த ஒரு தகவல் கீழே
வேலூரில் எங்கள் அலுவலகத்திற்கு எதிரில் சரவணபவன் ஹோட்டலின் கிளை திறந்தார்கள். கொஞ்ச நாளிலேயே ஈ ஓட்ட அதிரடி விலை குறைப்பு என்று லோக்கல் கேபிள் சேனல்களில் ஸ்க்ரால் விளம்பரங்கள் கூட வந்தது. பொற்கோயில் வந்தவுடன் சனி, ஞாயிறுகளில் கூட்டம் சேர்ந்தது. மீண்டும் விலை ஏறியது. அந்த சாலை ஒரு வழிப்பாதையாக கொஞ்ச காலம் மாறிய போது கூட்டம் சேராமல் அந்த கிளையையே மூடி விட்டார்கள்.
No comments:
Post a Comment