"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத எங்கள் சங்கமென்று சங்கே முழுங்கு"
பாவேந்தரின் பாடலை கொஞ்சமாக மாற்றியுள்ளேன்.
உளமாற, உணர்வுப்பெருக்கோடு சொல்வேன்- இது சத்தியம்.
இன்று எங்கத்தின் அமைப்பு தினம்.
எழுபது ஆண்டுகளாக தொடரும் போராட்டப் பயணம், வெற்றிப் பாரம்பரியம் மேலும் தொடரும், உறுதியாக, வேகமாக . . .
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாமல் எல்.ஐ.சி எனும் நிறுவனம் இல்லை.
எல்.ஐ.சி யை காக்கும் அரணாக, அதன் வளர்ச்சிக்கான விதையாக, தாக்குதலைத் தாங்கும் கவசமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்வதால் மட்டுமே
இன்று ஒவ்வொரு இன்சூரன்ஸ் ஊழியரும் எதிர்காலம் குறித்த அச்சமின்றி ஒவ்வொரு நாளும் உறங்க முடிகிறது.
அற்புதமான வாழ்க்கைத் தரத்தை அளித்துள்ளதால் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடை போட முடிகிறது.
வேலை வாய்ப்புக்களை அறுபதுகளிலேயே சுருக்கப்பார்த்த முயற்சிகளை முறியடித்த காரணத்தாலேயே,
பணி நியமனம் நேர்மையாக நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திய காரணத்தாலேயே
இன்று நாங்கள் பார்க்கும் பணி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அளித்த கொடை.
இதை எந்நாளும் மறவாமல்
எங்கள் சங்கத்தை கண்ணின் மணி போல காத்திடுவோம்
என்ற உறுதியோடு சொல்வோம்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நீடூழி வாழியவே.
Happy Birthday A.I.I.E.A
அருமையான பதிவு. AIIEA வாழ்க
ReplyDelete