வெட்கங்கெட்டவர்கள்
சோம்பேறித்தனமாக
சொகுசு வாழ்க்கை வாழ தாத்தாவும் அப்பாவும் சேர்த்து வைத்த சொத்துக்களை விற்று வாழும்
புத்தி கெட்டவர்களை எப்படி திட்டுவீர்கள்?
உருப்படியாக
எதையும் உருவாக்க துப்பில்லாமல் ஏற்கனவே இருப்பதையும் நாசமாக்கிக் கொண்டு அதையே பெருமையாக
பேசித் திரிபவர்களை எந்த வார்த்தை கொண்டு திட்டுவீர்கள்?
பிச்சைக்காரனின்
தட்டில் இருப்பதை பிடுங்கிக் கொண்டு அதை உண்டு கொழுத்த பெருச்சாளிக்கு தானமிடுபவனை
என்ன சொல்லி திட்டுவீர்கள்?
நான்
அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வார்த்தை ஜாலம் காண்பித்து விட்டு அதற்கு முற்றிலும்
முரணாக செயல்படும் மோசடிப் பேர்வழியை திட்ட எப்படிப்பட்ட வார்த்தைகள் பொருத்தமாக இருக்கும்?
நீங்கள்
அணிந்திருக்கும் அனைத்து ஆடைகளையும் அகற்றி விட்டு நான் உனக்கு அணிவித்திருக்கிற ராஜ
உடை எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது தெரியுமா என்று யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள்
திட்டுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வீர்களா?
நான்
யாரைச் சொல்கிறேன் என்ற விளக்கமெல்லாம் அவசியமில்லை. பில்லா ரங்கா கூட்டாளிகளையும்
நேற்று விற்பனை அறிக்கை கொடுத்துள்ள அவர்களின் அதி மேதாவி நிதியமைச்சரையும் தான் சொல்கிறேன்
என்று புரிந்து கொள்ளாமல் இருக்க நீங்கள் ஒன்றும் முட்டாள் சங்கி அல்ல.
சொல்லுங்கள்
இவர்களை
எப்படி திட்டலாம்?
திட்டுவதை
தாண்டி வேறென்ன செய்யலாம்?
No comments:
Post a Comment