Friday, February 5, 2021

அஸாருதீன்- சச்சின்-மேட்ச் பிக்சிங் ஊழல்


தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான முகநூல் பதிவு சங்கிகளின் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது. 


'அசாருதீனின் ஊழல் காலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை மீட்டவர் சச்சின்' என்று சங்கிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது முற்றிலும் தொடர்பற்ற ஒரு விவாதம் தான் என்றாலும், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
2000 ஆம் ஆண்டில் அசாருதீன் மீது பணம் வாங்கிக்கொண்டு மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ யும் ஐசிசியும் ஆயுட்காலத் தடைவிதித்தன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அசாருதீன். அந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்று 2012இல் தீர்ப்பு வெளியானது.
தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருந்தது தெரியுமா?
"அசாருதீன் பணம் வாங்கி மேட்ச் ஃபிக்சிங் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவரை கிரிக்கெட் விளையாட தடைசெய்ததே சட்டவிரோதமானது. பிசிசிஐ அவசரப்பட்டு, விசாரிக்காமல் அந்த முடிவை எடுத்திருக்கிறது" என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
ஆக, 99 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, தனது 100வது போட்டியினை எதிர்பார்த்துக் காத்திருந்த அசாருதீனை திட்டமிட்டு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து வெளியேற்றிய பிசிசிஐ நிறுவனத்தின் அன்றைய குழுவை முட்டிக்குமுட்டி தட்டி விசாரித்திருந்தால் பல உண்மைகள் வெளியாகியிருக்கும்.
இந்தியாவில் யாரெல்லாம் கிரிக்கெட் விளையாடலாம், யாரெல்லாம் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதை பிசிசிஐ என்கிற ஒரு தனியார் நிறுவனம் முடிவு செய்கிறது என்பது எவ்வளவு கேவலமான உண்மை.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இசுலாமியர்களுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட (நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற) ஒடுக்குமுறைகளை எல்லாம் தொகுத்தால் ஒரு பெரிய நூலையே எழுதலாம்...

No comments:

Post a Comment