2019 ம் வருடம் வெளியான "பிகில்" படத்திற்குப் பிறகு அரங்கில் சென்று பார்த்த திரைப்படம்.
ஒரு எளிய கதை. ஜீவா அருள்நிதி என்ற நண்பர்களின் திருமணம் பற்றிய கதை. நகைச்சுவை பிரதானமாக உள்ள படம். ரோபோ சங்கர், பால சரவணன் ஆகியோரின் டைமிங் கவுண்டர் படம் சுவாரஸ்யமாக இருக்க காரணமாகிறது. கட்சி மாறிப்போனாலும் ராதாரவி ரசிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. பின்னணி இசையில் சில இடங்களில் தந்தையை நினைவு படுத்தும் யுவன் சங்கர் ராஜா, பாடல்களில் காணாமல் போய் விட்டார்.
ராதாரவி அலுவலகத்திற்கு முன்பு இருக்கிற "தந்தை பெரியார் சிலை" காரைக்குடி நாட்களை நினைவு படுத்தியது.
கிளைமேக்ஸிற்கு முந்தைய "கபடிப் போட்டி" ரொம்பவும் ஓவர். சண்டைக் காட்சியை போட்டியாக காண்பித்திருக்க வேண்டும்.
முகம் சுளிக்கும் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாத படம் என்பதால் பார்க்கலாம்.
பிகு: வீட்டில் அமர்ந்து பெரிய திரையில் பார்த்த உணர்வு கிடைத்தது.
ஆமாம்.
எங்களையும் சேர்த்து அரங்கில் இருந்தவர்கள் மொத்தம் இருபது பேர்தான். மின் கட்டண அளவிற்குக் கூட வசூல் வந்திருக்காது.
அரங்கில் சென்று பார்ததற்கு நன்றி. அன்புடன் ஸ்ரீநாத்.(ஒரு சினிமாக்காரன்)
ReplyDelete