இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி மிகவும் முக்கியமானது. பீமா கொரேகான் வழக்கு என்ற பெயரில் பல சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு ரோனா வில்சன் என்ற செயற்பாட்டாளரின் லேப்டாப்பில் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதற்கான ஆதாரம் இருக்கிறது என்றுதான் அரசு சொன்னது.
அவரது மின்னஞ்சல் கணக்கிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதன் மூலம் ஹாக்கர்கள் எப்படி அவரது லேப்டாப்பில் ஊடுறுவினார்கள் என்று ஒரு அமெரிக்க ஆய்வகம் கண்டறிந்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். அந்த செய்தி கீழே உள்ளது.
அந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று நீதிமன்றத்தில் மத்தியரசு சொல்கிறது. அவர்கள்தான் ஊடுறுவிய குற்றவாளிகள். பின் எப்படி ஏற்பார்கள்?
ஒரே ஒரு கேள்விதான்.
பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது ஏன் ஒன்றரை வருடமாக குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல், வழக்கு நடத்தாமல் இருக்கிறது அரசு?
பொய் வழக்கு என்பதால்தானே
No comments:
Post a Comment