Wednesday, February 10, 2021

பரியன் தந்தைக்கு பரிவோடு

 







தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான தோழர் களப்பிரன் அவர்களின் முகநூல் பதிவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமுஎகச அமைப்பிற்கும் தோழர் நாறூம்புநாதன் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.


ரு அமைப்பின் செயல்பாடு ஒருவர் வாழ்வில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் #நெல்லை_தங்கராசு.

தமுஎகச மாநிலக்குழு
சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசு (பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தவர்) அவர்களுக்கு நாட்டுப்புற கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்தோம். அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சென்ற போது அவர் வறுமையில் குடிசை வீடு ஒன்றில் வசிப்பது தெரியவந்தது. தெரிந்தவுடன் நமது தோழர்
R Narumpu Nathan
உள்ளிட்ட நமது தோழர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு நம் அமைப்பின் சார்பாக அவரின் நிலையை கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த அடிப்படையில் நேற்று நடந்தவை...

1. தங்கராசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தர முன் வந்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு.

2. அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார். சம்பளம் ரூ 10,000/- ( தற்போது வெளியூரில் ஒரு தனியார் பள்ளியில் 2500/- சம்பளத்தில் அவர் பணி புரிகிறார்)

3. நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசு அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000/- பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். விரைவில் கிடைத்து விடும்.

4. அவரது வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு ஏதேனும் நிதியுதவியை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா
Aadhavan Dheetchanya
நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 68,000/- நிதி சேர்ந்துள்ளது. Bஇனியும் கொஞ்சம் வரலாம்.

5. நேற்று மாவட்ட ஆட்சியர் 70,000/- ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார்.
தமுஎகச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு அவர்களுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது.

அது பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இது நமது அமைப்பின் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் சொல்லலாம்.

இவரைப்போல நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும் உள்ளனர். அவர்களையும் ஆதரிக்க அந்தப்பகுதியில் உள்ளவர்கள் முன்வர வேண்டும் என்பதே நமது அமைப்பின் குறிக்கோளாகும்.

No comments:

Post a Comment