சர்தார் வல்லபாய் படேலுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் அவருக்கு வானளவு சிலை வைத்தோம் என “ஸ்ட்டேட்டுக்கு ஓப்பி யூனிட்டி” திறந்த போது பாஜகவினர் பீற்றிக் கொண்டார்கள்.
படேல் இறந்த போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட நேரு செல்லவில்லை என்று கூட மோடி கதை விட்டார். நேரு சென்றது மட்டுமல்ல அவரது சவப்பெட்டியைக் கூட தூக்கிச் சென்றார் என்று மொரார்ஜி தேசாயின் சுய சரிதை புத்தகத்திலிருந்து எடுத்துச் சொன்ன பிறகு கூட அந்த பொய்க்கு மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள “சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டு “நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்” என்று நாமகரணம் நிகழ்ந்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் பெயரை நீக்கி உங்கள் பெயரை சூட்டுவது படேலுக்கு செய்யும் அவமதிப்பில்லையா மோடி?
ஒரு டவுட்டு
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா வென்றால் மோடியின் பெயர் ராசி என்று நிச்சயம் தம்பட்டம் அடிப்பார்கள்.
ஒரு வேளை தோற்றுப் போனால்?
தோற்றுப் போகாமல் இருக்க மேட்ச் பிக்ஃசிங் செய்வார்களோ?
சங்கிகள்
இதற்கு பதில் சொல்வார்களா?
Gujju porambokku paerila stadium onnuthaan romba mukkiyam.
ReplyDelete