பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து வாய் திறந்துள்ள நிர்மலா அம்மையார் அது "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று சொல்லியுள்ளார். விலையை குறைக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும் சொல்லியுள்ளார்.
விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்களே தவிர அரசு அல்ல.
கச்சா பொருளின் விலை உயர்ந்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாது.
மத்தியரசு வரியை குறைத்தாலும் மாநில அரசுகள் வரியைக் குறைக்காவிட்டால் பயனில்லை.
இதெல்லாம்தான் அவர் உதிர்த்த கருத்து முத்துக்கள்.
அவர் சொன்னதெல்லாம் சரியா?
விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது அரசுதான். அரசு அப்பொறுப்பை மீண்டும் தன் வசம் எடுத்துக் கொள்ள முடியும்.
கச்சா பொருளின் விலை குறைந்தாலும் இங்கே விலை குறையாமல் இருப்பதுதானே பிரச்சினை!
ஜி.எஸ்.டி வரம்பின் கீழ் பெட்ரோல் டீசல் வந்து விட்டால் இந்தியா முழுதும் ஒரே விதமான வரிதானே இருக்கும்! அதை செய்ய ஏன் அரசு தயாராக இல்லை? ஜி.எஸ்.டி என்றால் 28 % க்கு மேல் வரி போட முடியாது. மாநிலங்களுக்கும் பங்கு தர வேண்டும்.
உண்மை இப்படி இருக்க "மஹா பயங்கர தர்ம சங்கடம்" என்று செண்டிமெண்ட் வசனம் பேசி தப்பிப்பதுதான் "மஹா பயங்கர அயோக்கியத்தனம்" நிர்மலா மேடம்.
No comments:
Post a Comment