நேற்று
முன் தினம் எழுதிய தேங்காய் பொடி பதிவின் தொடர்ச்சி.
அதைப்
படிக்காதவர்களுக்காக இணைப்பு இங்கே
மூன்று
தேங்காய்களை துறுவியதில் பாதியை தேங்காய் பொடிக்கு பயன்படுத்தி விட்டு மீதியைக் கொண்டு
மிக சுலபமாக செய்தது தேங்காய் பர்பி.
கொஞ்சமாக
நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக வைத்துக் கொண்டேன்.
அதே
வாணலியில் தேங்காயை கொஞ்சம் வறுத்து விட்டு தேங்காய் அளவிற்கே சர்க்கரை சேர்த்து கொஞ்சமே
கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்த முந்திரியையும் சேர்த்து
நன்றாக சுருண்டு வரும் நேரத்தில்
நெய்
தடவிய தட்டில் கொட்டி வில்லை போட்டு கொஞ்சம் நேரம் கழித்து எடுத்தால்
தேங்காய்
பர்பி தயார்
No comments:
Post a Comment