Wednesday, January 6, 2021

போகாதே போகாதே என் ரஜினி

 


பதுங்கு குழியிலிருந்து வெளிவந்த மூத்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் ரஜினிக்கு எழுதியுள்ள கண்ணீர் காவியம் கீழே உள்ளது.



பள்ளிக்கூடக் கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காத,  ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காத, கொரோனா வார்ட் அமையக்கூடாது என்று கல்யாண மண்டபத்தை பூட்டி வைத்த, அதற்கு வரி கட்ட மறுக்கிற, சாதாரண ஈ பாஸ் கூட வாங்காத 

ஒரு மோசடிப் பேர்வழியை  உத்தம சிரோண்மணி என்று சொல்லும் மாலன் திமுக கூட்டணிக் கட்சிகளை மட்டும் பிரத்யேகமாக திட்டி விட்டு ஊழல் கட்சிகள், கொள்கையற்றவர்கள் என்று பாஜக, அதிமுகவை மட்டும் சொல்லவில்லை. அயோக்கியத்தனம் என்று மனுஷ்ய புத்திரன் மாலனை தொலைக்காட்சியில் சாடியது நூற்றுக்கு நூறு சரியே.

இந்த கண்ணீர் காவியத்தை படிக்கையில் "போகாதே, போகாதே, என் கணவா?" என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.

அரசியலை விட்டு போனாலும் "எங்களைப் போன்ற அயோக்கியர்கள் ஆதரிக்கும் அயோக்கியக் கூட்டணிக்கு வாய்ஸ் கொடு" என்று விஷமூர்த்தி போல கேட்பதுதான் அந்த புலம்பலின் நோக்கம்.

"போருக்கு போனால் இறந்து போய் விடுவாய் என்று கனவு கண்டேன், அதனால் போகாதே" 

என்று பாடியது வெள்ளையம்மாள்.

"லீ க்வான் கியூ" போல சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது வேலை பார்க்க வேண்டும். அரசியலை விட்டு போகாதே போகாதே. அப்போதுதான் என் பிழைப்பிற்கு பிரச்சினையில்லை"

என்று  ஒப்பாரி வைத்தால்

அது மாலன்.

பிகு: மாலை பதிவு : வீணாய் போன ஆயிரம் டி.ஷர்டுகள்

No comments:

Post a Comment