Monday, January 4, 2021

உ.பி சுடுகாட்டுக் கொலைகள்

 


உத்தரப் பிரதேச மாநிலத்தில் கஸியாபாத் மாவட்டத்தில் முர்டா என்ற இடத்தில் சுடுகாட்டுக் கூரை இடிந்து விழுந்ததில் இதுவரை 25 பேர் இறந்து போயுள்ளனர்.

மொட்டைச்சாமியார் மாநிலம் என்பதால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என்று ஏராளமானவர்கள் அஞ்சலி செய்தி அனுப்பியுள்ளார்கள்.

கடும் மழை காரணமாக அந்த சுடுகாட்டுக் கூரை இடிந்து போய் விட்டது என்று செய்திகள் வந்திருந்தன. பழங்காலத்தில் கட்டப்பட்டதோ என்று நினைத்திருந்தேன். ஒரு படத்தில் காவி நிறத்தில் எழுத்துக்கள் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் நடந்தது விபத்தல்ல, கொலைகள் என்ற முடிவுக்கு தள்ளியது.

அது பழைய கட்டிடம் அல்ல.

இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கான நிழல் கூரை. 

ஐம்பத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அஜித் தியாகி என்ற பாஜககாரர்தான் ஒப்பந்தக்காரர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு கட்டப்பட்டு மூன்று மாதங்களாகத்தான் செயல்பட்டு வருகிறது.

இடிபாடுகளைப் பார்க்கிற போது சிமெண்ட் என்ற ஒன்று சும்மா தூவி விடப்பட்டுள்ளதாகவே தெரிகிறதாக மக்கள் கூறுகின்றனர்.

மொட்டைச்சாமியார் ஆட்சியின் ஊழலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

முன்பு குழந்தைகள் உயிரோடு விளையாடினார்கள். இப்போது சுடுகாட்டுக்கு வந்தவர்களின் உயிரோடு விளையாடி விட்டார்கள்.

இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்.

பொருளாதார வீழ்ச்சி கடவுளின் செயல் என்று சொன்ன நிர்மலா அம்மையாரின் பாணியில் "எல்லாம் வருண பகவான் செயல்" என்று சொல்லி கேஸை இழுத்து மூடி விடுவார்கள். 


No comments:

Post a Comment