Tuesday, January 12, 2021

இறுதிச்சுற்றிலும் நிச்சயம் வெல்வார்கள்

 தற்காலிக வெற்றி நிரந்தரமாகட்டும்


 

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களும் அமலுக்கு வருவதற்கு உச்ச நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய வீரம் செறிந்த உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இது.

 இது தற்காலிகமானதுதான்.

 குடியரசு தினத்தன்று தலைநகரில் நடத்துவதாக இருந்த  ட்ராக்டர் பேரணியை தவிர்ப்பதற்கான உத்தி என்று சிலர் ஐயப்படுவது கூட சரியாக இருக்கலாம்.

 ஆனால்

 ஆணவப்போக்குடன் நடந்து கொண்ட மோடி வகையறாக்களுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவுதான்.

 நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு வாக்கெடுப்பை புறக்கணித்து நிறைவேற்றிய சட்டங்களை தற்காலிகமாக அமலாக்காமல் நிறுத்தி வைத்திருப்பதே அவர்களுக்கு ஒரு தோல்விதான்.

 போராட்டங்களை ஒடுக்குகிற கருவியாகவே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை.

 அப்படிப்பட்ட நீதிமன்றம் கூட இந்த போராட்டத்தை கலைக்க எந்த உத்தரவும் தரவில்லை.

 அளவு மாற்றம் குண மாற்றத்தை உண்டாக்கும் என்பதற்கு ஒரு மிகப் பெரிய சான்று இந்த போராட்டம்.

 கொடும் பனிக்கும் கொடிய அரசுக்கும் அஞ்சாமல் வெட்ட வெளியில் அவர்கள் காண்பித்த தீரம்தான் அவர்கள் மீது  நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லும் துணிவை நீதிமன்றத்திற்கு தரவில்லை/

 அரசு அடாவடியாக நடக்கும் போதே உறுதியாக இருந்தவர்கள், நாளை இந்த வெற்றியின் துணை கொண்டு இன்னும் வேகமாக போராடுவார்கள்.

 முதல் சுற்று வெற்றியை இறுதிச் சுற்றிலும் பெற வாழ்த்துக்கள்.

 போராட்டப்பாதை மீது மக்கள் கவனத்தை திருப்பிய எம் வீரர்களே, இந்திய விவசாயிகளே, உங்களுக்கு எம் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

களத்தில் உயிர் நீத்த தியாகிகளே, வீர வணக்கம்

No comments:

Post a Comment