எப்போதோ படித்தது.
ஒருவன் தன் தாய், தந்தையை கொன்று விட்டான். போலீசிலும் மாட்டிக் கொண்டு விட்டான். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு அளிக்கும் முன்பு “நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா” என்று நீதிபதி கேட்க
அவன்
“நான் தாய், தந்தை இல்லாத அனாதை என்பதால் ஐயா, என் மீது கருணை காண்பிக்க வேண்டும்”
என்றான்.
இந்த கதைக்கும்
“ அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும்”
என்று தெர்மகோல் ராஜூ சொன்னதற்கும்
எந்த தொடர்பும் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்!
பிகு: ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது.
No comments:
Post a Comment