Monday, January 11, 2021

சுப்ரீம் கோர்ட் -ஓப்பனிங் நல்லா இருக்கு

 


சுப்ரீம் கோர்ட் என்ன சொல்றாங்க?

 “வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா அல்லது நாங்கள் நிறுத்தி வைக்கட்டுமா?

  என்று மத்தியரசை உச்ச நீதி மன்றம் கேட்டதாக வரும் தகவல் கொஞ்சம் மகிழ்ச்சியளிப்பது போல இருந்தாலும்

 “வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக யாரும் வழக்கு தொடுக்கவில்லையே”

 என்று சொல்வதில்

 “யாராவது வழக்கு போட்டால்தானே அரசுக்கு ஆதரவாக ஏதாவது செய்ய முடியும்”

 என்ற பொருள் ஒளிந்துள்ளதாகவும் தோன்றுகிறதே!

 சொல்றது எதுவானாலும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க.

 இப்படித்தான் ஏ1 அம்மா ஒன்றரை லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்களை ஒற்றைக் கையெழுத்தில பணி நீக்கம் செய்த வழக்கில சுபாஷன் ரெட்டி என்ற நீதிபதி அரசு வழக்கறிஞரை கேள்வி மேல கேள்வி கேட்டு குடைஞ்செடுத்தாரு. கடைசியில் கொடுத்த தீர்ப்பு வேற.

 நீங்க மத்தியரசை வீரமா கேள்வி கேட்கற போதெல்லாம் அந்த சம்பவம் வேற ஞாபகத்துக்கு வந்து தொலைச்சுக்கிட்டே இருக்குதே!

 ஓபனிங் நல்லாதான் இருக்கு, ஃபினிஷிங்க்ல சொதப்பிடாதீங்க ஐயாமாரே!

 

 

 

 

 

No comments:

Post a Comment