Tuesday, January 12, 2021

எல்லாம் போலி - அதுதான் சங்கி



ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் வ்ஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.

 போலிச் செய்தியை ’நம்பி’ அவதூறு செய்யும் சங்கித் தம்பிகள்

ஜனவரி 9 அன்று பல இந்திய ஊடகங்கள் ஒரு செய்தியை திரித்து வெளியிட்டு தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தின. இதுதான் கதை:
பிப்ரவரி 26, 2019 அன்று இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானிற்குள் ஊடுருவித் தாக்கியதில் 300 பாகிஸ்தானியர் கொல்லப் பட்டனர் என்கிற செய்தி உண்மைதான் என்று ஆக்ஹா ஹிலாலி என்கிற முன்னாள் பாகிஸ்தானிய தூதரக அதிகாரி ஒப்புக்கொண்டார் என்பதே அந்த செய்தி. ஏஎன்ஐ என்கிற அரசு ‘சார்பு’ செய்தி நிறுவனம் கொடுத்த செய்தி அது.

ஹிலால் பேசியது ஹம் டிவி தொலைக் காட்சி விவாதத்தில். அவர் சொன்னது இதுதான்: “சர்வதேச எல்லையை மீறி வந்ததால் இந்தியா போர் தொடுத்தது என்றே ஆகிறது. குழந்தைகள் படித்துக் கொண்டிருந்த மதராஸாவைத் தாக்கி இந்தியா 300 பேரைக் கொல்ல நினைத்தது. 300 குழந்தைகள் அங்கு இருந்ததாக இந்தியாவுக்குக் கிடைத்த தகவல் தவறு. உண்மையில் இந்திய விமானங்கள் குண்டு வீசியது ஒரு மைதானத்தின் மீதுதான்.”

(சம்பவம் நடந்த போது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனையும் அதிகாரிகளையும் குறிப்பிட்டு தாக்குதலில் 300 பேர் இறந்திருக்கலாம் என்று செய்தி வெளியிட்டன. தாக்குதலில் யாரும் இறக்க வில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கூறின. )

இது குறித்து ரிபப்ளிக் டிவியும் ட்விட்டரில் வெளியான ஒரு போலி வீடியோவை வைத்துக் கதறியது.

போலிச் செய்திகளை அம்பலப் படுத்தி வரும் ஆல்ட் நியூஸ் நிறுவனம் ரிபப்ளிக் டிவி காட்டிய வீடியோவையும், அசலான ஹம் டிவி வீடியோவையும் (யூ டியூபிலிருந்து எடுத்து) ஒப்பிட்டுப்பார்த்தது. ரிபப்ளிக் டிவி வெளியிட்ட வீடியோ திருத்தப் பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்தது. மேலும் அசலான வீடியோ பாலாகோட்டில் சேதமடைந்த படத்தைக் காட்டியது. ஆனால் ரிபப்ளிக் டிவியின் வீடியோ ராணுவ உடையணிந்த பிரதமர் மோடியைக் காட்டுகிறது.

அசல் வீடியோவில் விவாதத்தில் பங்கேற்றோரைக் காட்டும் பேனல்களின் ஓரங்கள் வெள்ளை நிறத்திலிருக்கின்றன. போலி வீடியோவில் அவை பிங்க் நிறத்திலிருக்கின்றன.

ஏஎன் ஐ கொடுத்த போலிச் செய்தியை சில ஊடகங்கள் தவறென்று தெரிந்து நீக்கி விட்டன.

ஆனால் நம்ம ஊர் நம்பி நாராயணன் (ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்) தமிழ் தொலைக் காட்சி சானல்கள் அந்த போலிச் செய்தியை விவாதிக்காதா எனக் கேட்டுச் சேற்றை வாரி இறைத்திருக்கிறார். எங்கே காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக நண்பர்கள்? என்று கூவியிருக்கிறார். போலிச் செய்தி என்று தெரிந்தும், நண்பர்
Gunaa Gunasekaran
கண்டித்த பின்னும் அவரது முகநூல் பக்கத்தில் அந்தச் ‘சவாலை’ அவர் நீக்க வில்லை.

அவருடைய பார்வையில் நண்பர்கள் குணா, கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், ஹரிஹரன் ஆஹியோர் டீம் லெஃப்ட்.

எப்போதுமே டீம் ரைட் இவர்கள்தானாம்: மதன் ரவிச் சந்திரன், கோலாகல ஸ்ரீனிவாஸ், ரங்கராஜ் பாண்டே, ரகுநாதாச்சாரியா.

பொங்கலிலும் போலி, போலிச் செய்தியை வைத்துப் பொங்குவதிலும் போலி.
வெட்கமே இல்லையா உங்களுக்கெல்லாம்.

திரு குணா அவர்களின் எதிர்வினை கீழே உள்ளது.


இன்னும் கூட அந்த டுபாக்கூர் நம்பி நாராயணன் தன் பதிவை அப்படியே வைத்துள்ளார்.

அது சரி,

அப்படியெல்லாம் உண்மையாகவோ, நேர்மையாகவோ இருந்தாலோ,
வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இருந்தால் அவர்கள் எப்படி சங்கியாக இருப்பார்கள் !

No comments:

Post a Comment