Monday, January 4, 2021

ஆஜானின் ஞான மரபு சிஷ்யையா இப்படி?

 


 

“மரம் அமைதியாக இருக்க விரும்பினாலும் மர மண்டைகள் விடுவதில்லை”

 என்று ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ஒரு பதிவில் சொல்லியிருந்தார்.

 ஆஜான் வகையறாக்களைப் பற்றி எழுதாமல் இருப்போமே என்று நினைத்தால் அவர்களும் விடுவதில்லை.

 சைவத் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் நிறுவனரும் சங்கிகளை அவ்வப்போது அம்பலப்படுத்தும் கலையரசி நடராஜன் அவர்கள், பாஜகவில் குஷ்புவோடு இணைந்த டுபாக்கூர் மதன் ரவிச்சந்திரனும் புளிச்ச மாவு ஆஜான் குண்டர் படையின் மகளிரணி தலைவி வெண்பா கீதாயனும் பேட்டி எடுக்க வந்து இரண்டு பவுன் சங்கிலியை திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுதான் இரண்டு நாட்களாக பரபரப்புச் செய்தி.

 எங்கள் மீது அவதூறு சொல்வதற்குப் பதிலாக பாட்டி போலீசில் புகார் கொடுக்கலாமே என்பது ஜெமோ சிஷ்யையின் வாதம். சரிம்மா, நீயும் முகநூலில் பதிவு போடுவதற்குப் பதிலாக பாட்டி மேலே அவதூறு வழக்கு போடலாமே என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 மதன் எடுத்த பேட்டியை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு எரிச்சலூட்டுகிறத. அடுத்தவரை பேச விடாமல் அர்ணாபு போல அந்தாள் கத்திக் கொண்டே இருந்ததால் வந்த எரிச்சல் அது.

 செயினை திருடினாங்களா, இல்லையா என்ற விவகாரத்திற்குள் நான் நுழையவில்லை.

 மதன் பேட்டிக்குப் பிறகு அந்த பாட்டி வெளியிட்ட வீடியோவில் செயின் திருட்டைத் தாண்டியும் வேறு பல விவகாரங்கள் உள்ளன.

 லயோலா கல்லூரி மாணவர்கள் என்று சொல்லி பேட்டி எடுக்க வந்தார்கள்.

 அந்த பெண் தன் பெயரை வளர்மதி என்று சொன்னாள்.

பேட்டி வேண்டும் என்பதற்காக இரண்டு முறை காலில் விழுந்தாள்.

தங்கள் சேனலுக்கு “சமூக நீதி” சேனல் என்று பெயர் எனச் சொன்னாள்.

 இதெற்கெல்லாம் ஜெமோ சிஷ்யை எந்த பதிலும் சொல்லவில்லை.

 ஒரு பேட்டி வேண்டும் என்பதற்காக இத்தனை பொய்களை சொல்லலாமா?

 இந்த பொய்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?

 எப்போதும் “அறம், அறம்” என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஞான மரபிலின் சிஷ்யைக்கு இப்படிப்பட்ட அறமற்ற செய்கைகள் அவசியமா?

 பாவம் உங்கள் ஆஜான்!

 ஆஜானின் சிஷ்யை திருடி விட்டார் என்று எல்லோரும் சொல்வது ஆஜானுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு!

 வழக்கமாக அவரது செய்கைக்காகத்தான் கல்லடி வாங்குவார். இப்போது சிஷ்யையின் செய்கைக்கும் அவருக்கு கல்லடி விழுகிறதே!

 இது நியாயமா?

 

1 comment:

  1. விஷ்ணுபுரம் இளவரசியை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது

    ReplyDelete