Friday, January 1, 2021

முந்திரி கத்லி உருண்டையான சோகக்கதை

 


புத்தாண்டிற்கு முதல் பதிவாக ஒரு புது இனிப்பை முயற்சி செய்வோம் என்று தொடங்கி சொதப்பலான சோகக்கதை இப்பதிவு.

இதுவரை முயற்சிக்காத முந்திரி கத்லி செய்யலாம் என்று யூட்யூபில் பார்த்த குறிப்புக்கள் படியே தொடங்கினேன்.

முந்திரியை வறுத்து பொடி செய்து சர்க்கரை பாகில் கிளறுவது வரை சரியாகவே போனது. 





இந்த கட்டத்தில்தான் ஒரு நிமிடம் கூடுதலாக அடுப்பில் இருந்ததால் சப்பாத்தி மாவு போல வர வேண்டிய கலவை


இப்படி ஆகி விட்டது.

எனவே வேறு வழியில்லாமல் அதை மிக்ஸியில் நன்கு பொடி செய்து


நெய்யை சூடாக்கி கலந்து 



உருண்டையாக பிடித்து விட்டேன்,

ஆனாலும் ஓய்வதாக இல்லை. நினைத்தபடி வரும் வரை முயற்சி தொடரும். பொங்கல் சமயத்தில் நான்கு நாட்கள் விடுமுறை.

முந்திரி கத்லியே உன்னை அப்போது கைப்பற்றுவேன்.


No comments:

Post a Comment