Saturday, January 2, 2021

பயணங்கள் குறைவு. பக்கங்களும் . . .



போன வருடத்து வாசிப்புக் கணக்கு கீழே உள்ளது. கொரோனா காரணமாக கடந்த வருடம் பயணங்கள் மிகவும் குறைவு. தொழிற்சங்கப் பணியிலான பயணம் என்பது மார்ச் 18 க்குப் பிறகு டிசம்பர் 19 ம் தேதிதான் நடந்தது. பெரும்பாலும் நான் படிப்பது பயணங்களில்தான் என்பதால் பயணங்கள் இல்லாமை வாசிப்பையும் பாதித்தது.

 ஊரடங்கில் வீடடங்கி இருந்த போது பெரிய அளவில் படிக்கவில்லை. வேள்பாரி, ஜிந்தாபாத், ஜிந்தாபாத், கம்பிக்குள் வெளிச்சங்கள் ஆகிய நூல்களை  மீண்டும் வாசித்தாலும் பட்டியலில் இணைக்கவில்லை.

 புதிய நூல்கள் சிலவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கினேன். பணம் அனுப்பிய அன்றே நூல்களை அனுப்பிய பொள்ளாச்சி “எதிர்” வெளியீடு நிறுவனத்தின் வேகமும் பாராட்டத்தக்கது.

 கொரோனா இரண்டாம் அலை தாக்காவிட்டால் இயல்பு வாழ்க்கை முன்னைப் போல தொடர்ந்தால் அடுத்த ஆண்டாவது வாசிப்பு அதிகமாகும் என்று நம்பிக்கை உள்ளது.

 என்னுடைய நூல் “முற்றுகை”யும் சிலரால் வாசிக்கப்பட்டது என்பது ஒரு பெருமையே. . .



2 comments: