Tuesday, January 5, 2021

பொங்கலுக்கு ஏது காசு மந்திரி?

மூன்றாம் தேதியே எழுதியது. வேறு பதிவுகளால் வெளியிடவில்லை. பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக பொங்கல் சமயத்தில் வந்து விடும் என்று சொல்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன்.

ஐயா, மந்திரி அவர்களே, மக்களிடம் பொங்கல் சமயத்தில் பணம் இருக்கப் போவது கிடையாது. 

கொடுத்த பணத்தை புத்தாண்டின் போதே வசூலித்து விட்டீர்கள். பொங்கல் சமயத்தில் நடக்கும் டாஸ்மாக் வசூல், மக்கள் உங்களுக்கு தரும் பொங்கல் பரிசு 

இந்த வருடம்  31 கோடி ரூபாய் அதிகம்

 02.01.2021 அன்றைய ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

 31.12.2020 அன்று டாஸ்மாக்கில் விற்பனை 160 கோடி ரூபாய். 31.12.2019 அன்றைய விற்பனையான 150 கோடி ரூபாயை விட பத்து கோடி ரூபாய் அதிகம்.

 30.12.2020 அன்று  விற்பனை 113 கோடி ரூபாய். 30.12.2019 அன்றைய விற்பனையான  92 கோடி ரூபாயை விட 21  கோடி ரூபாய் அதிகம்.

 மொத்தத்தில் வருடத்தின் கடைசி இரண்டு நாட்களில் மட்டும் முப்பத்தி ஓரு கோடி ரூபாய் கூடுதல் வணிகம் செய்து சாதனை படைத்துள்ளது டாஸ்மாக்.

 டாஸ்மாக் வருமானத்தின் மூலம் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசாக பெற்ற பணத்தில் பெரும் சதவிகிதம் மீண்டும் டாஸ்மாக்கிற்கே வந்து சேர்கிறது.

 மிகப் பெரிய பொருளாதார அசைவு இது என்று ஆஜானோ மூத்த பத்திரிக்கையாளரோ என்று ஏன் இன்னும் எழுதவில்லை என்றுதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment