Friday, January 1, 2021

2020 லிருந்து 2021 - நம்பிக்கையோடு

 


2020 நிறைவடைந்து விட்டது. 2021 துவங்கி விட்டது.

2020 எப்படிப்பட்ட ஆண்டு.

துயரங்களின் ஆண்டா?

கொரோனா எனும் பெறுந்தொற்று உலகை உலுக்கிய துயரமான ஆண்டுதான் இது. எத்தனையோ நல்ல உள்ளங்களை கொரோனா நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஆண்டு இது. செல், இனி இது போல வராதே என்று அனைவரும் வாய் விட்டே கூற வைத்த ஆண்டு.

தாக்குதல்களின் ஆண்டா?

ஆம். நிச்சயமாக தாக்குதல்களின் ஆண்டுதான். கொரோனா கிருமியை விட மோசமான கிருமியாக மோடி வகையறாக்கள் செயல்பட்ட ஆண்டு இதுதான். வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைத்தல், ஊதாரித்தனமான செலவுகள், கார்ப்பரேட்டுகளுக்கு நம்மிடம் உள்ள சொற்பத்தையும் பறித்து அளித்தல், ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தல் என்று தொடர் தாக்குதல்களை ஆட்சியாளர்கள் தொடுத்துக் கொண்டே இருந்த ஆண்டு இதுதான்.

நம்பிக்கையான ஆண்டா?

ஆம். 

ஊரடங்கு, இயக்கங்களை முடக்கினாலும் இணைய வழி இயக்கங்கள் என்ற புதிய வாசல் திறந்தது.

வெறுப்பரசியலுக்கு முடிவு கட்ட முடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்க தேர்தல் அளித்தது.

மக்கள் பிரச்சினைகளை தேர்தலின் விவாதப் பொருளாக்க முடியும் என்ற நம்பிக்கையை பீகார் தேர்தல் அளித்தது.

அனைத்தையும் விட மிக முக்கியமாக

ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போராட முடியும், தாக்குதல்களை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆண்டு துவக்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் நடந்த போராட்டங்களும் அதிலும் குறிப்பாக மாணவர்கள், இஸ்லாமியப் பெண்கள் ஆகியோரின் பங்கேற்பு நம்பிக்கையை விதைத்தது.

26 நவம்பர் 2020 அன்று பத்து கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஒரு நாள் வேலை நிறுத்தம் மிகச் சிறப்பானது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல

இன்று முப்பத்தி ஏழாவது நாளாக உறுதியோடு தொடரும் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் தருகிற நம்பிக்கையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இந்த நம்பிக்கையுடன் புத்தாண்டை துவக்குவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment