எப்போதோ படித்த கதை இப்போது நினைவுக்கு வந்தது.
ஒரு அரசன், தனக்கு பிடிக்காத ஒருவனுக்கு மரண தண்டனை அளித்தான். என்னை தூக்கிலிட்டால் ஒரு அற்புதத்தைப் பார்க்கும் வாய்ப்பை இழப்பீர்கள் என்றான்.
அது என்ன அற்புதம் என்று அரசன் கேட்க
ஒன்றரை வருட அவகாசம் கொடுத்தால் நான் குதிரையை பறக்க வைப்பேன் என்று அவன் சொல்ல அரசனும் ஒப்புக் கொண்டான்.
சக கைதி அவனிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்க
ஒன்றரை வருடத்தில் எவ்வளவோ சாத்தியம்.
அரசன் மனம் மாறி என்னை விடுதலை செய்யலாம். சிறை இடிந்து நான் தப்பிக்கலாம், நான் இறந்து போகலாம், அரசனே கூட இறந்து போகலாம். ஏன் குதிரை கூட பறக்கலாம். ஒன்றரை வருடம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்து என்ன என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
செய்தி" மூன்று வேளாண் சட்டங்களின் அமலாக்கத்தை ஒன்றரை வருடங்களுக்கு ஒத்தி வைக்க மத்தியரசு முன் வந்துள்ளது. அந்த கைதியின் மன நிலையில் அரசு!
No comments:
Post a Comment