Saturday, January 23, 2021

ஆஜான் பயம் பிடிச்சுருக்கு.

 

“ஜெயமோகன் – பாசிஸ இந்துத்துவத்தின் முகம்” நூல் வருவதைக் கண்டு ஆஜான் நடுங்கி விட்டார் போல.

 


 என்னைப்பற்றி இணையவெளியில், சிற்றிதழ்ச்சூழலில் எழுதப்பட்டவற்றில் ஒரு பகுதி இப்படி தொகுக்கப்பட்டிருக்கலாம். வே.மு.பொதியவெற்பன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், கௌதம சித்தார்த்தன்,  ஜமாலன், இரா. மோகன்ராஜன், பா.பிரபாகரன், .ரவீந்திரன், .முத்துமோகன், சுகுணா திவாகர், தமிழ்நதி, விலாசினி, ஆர்.பி.ராஜநாயஹம், ராஜகோபால் சுப்ரமணியம், .காமராசன், மகேஷ் ராமநாதன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் எழுதியிருப்பதாகவும் என்சிபிஎச் வெளியிடவிருப்பதாகவும் தெரிகிறது. தொகுப்பும் முன்னுரையும் பா.பிரபாகரன்,யமுனா ராஜேந்திரன்

 

ஆனால் நூல் அறிவிப்பு வந்து நெடுநாட்களாகின்றது. வெளிவருவதற்கு பிரசுரகர்த்தருக்கு நிதிச்சிக்கல்கள் இருக்கலாம். முன்விலைத்திட்டம் வெளியிடுவார்கள் என்றால் நம் நண்பர்கள் நூறுபிரதிகள் வரை வாங்கி உதவலாம்

 

நண்பர்களுக்கு இந்நூலை சிபாரிசு செய்கிறேன். ஏமாற்றாது. இதைப்போல அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ராஜசங்கர் விஸ்வநாதன், சுரேஷ் வெங்கடாத்ரி, திருப்பூர் தீக்குச்சி, ஒத்திசைவு ராமசாமி, சுந்தர ராஜசோழன் வகையறா குழுவும் ஒரு ஐநூறு பக்க நூலை கொண்டு வரவேண்டும். அவர்களுக்கும் நண்பர்கள் ஆதரவு கொடுக்கலாம். இலக்கியத்திற்கு  இதெல்லாம்  ஒருவகையில்  முக்கியமானவைதான்

ஜெ

 

என்று ஏதோ பெருந்தன்மையோடு அந்த நூலை வரவேற்பது  போல அவர் எழுதியிருந்தாலும் அவரது நடுக்கத்தை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு

No comments:

Post a Comment