அரசியல்
சாசனம், பொருளாதாரம், வரலாறு, சமூக சூழல், சுற்றுச் சூழல் என்று எது பற்றியும் அறியாத
ஒரு முட்டாள்தான் மோடி என்பது எல்லோரும் அறிந்த ஓர் உண்மை. இந்துத்துவ சங்கிகள், தங்களின்
நச்சுத்தனமான நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ள ராமாயணம், மகாபாரதம் பற்றிக்
கூட விவரம் தெரியாதவர்கள் என்பது டிமோ சொல்லியுள்ள அபத்தமான உதாரணம் உணர்த்துகிறது.
தேர்தல்
பத்திரம் ரத்து தொடர்பான தீர்ப்பு பற்றி பேசியுள்ள மோடி “ அவல் கொண்டு வந்தமைக்காக
குசேலன் மீது வழக்கு போட்டு அவலையும் கைப்பற்றி விடுவார்கள் என்று புலம்பியுள்ளார்.
குசேலனும்
உமக்கு தேர்தல் பத்திரம் மூலம் கொடுத்த செல்வந்தர்களும் ஒன்றா மோடி? குசேலன் அடுத்த
வேளை உணவுக்கே வழியில்லாத ஏழை, உமக்கு காசு கொடுப்பபர்களோ தின்று தின்று கொழுத்துப்
போன பெரும் செல்வந்தர்கள். அதானியும் அம்பானியும் குபேரனுக்கே சவால் விடுப்பவர்கள்.
அவங்களைப் போய் குசேலன்னு சொல்றீரே! அதனால் உம் ஒப்பீடு சரியில்லையே மோடி! குசேலன்
யாருன்னே தெரியாத நீரெல்லாம் ஏன்யா தப்பு தப்பா உதாரணம் சொல்றீரு!
ஆனா
யோசிச்சு
பார்த்தா ஒரு விதத்தில் நீ சொன்னது கரெக்ட்யா!
குசேலன்
கொண்டு வந்த அவலை சாப்பிட்ட கிருஷ்ணன், குசேலனுக்கு மாளிகை, தங்க நகைகள், இதர இதர செல்வங்களை
அள்ளிக் கொடுத்தது போல, தேர்தல் பத்திரம் எனும் அவலை வாங்கிக் கொண்டு இந்தியாவின் செல்வாதாரங்களையெல்லாம்
கொடுத்துள்ளீரே, கரெக்ட்தான்யா! அந்த அவலை முடக்கினது கரெக்ட்தான்யா!
பிகு:
தேர்தல் நெருங்கி விட்டது. இனிமே மோடிதான், டிமோ அல்ல . . .
No comments:
Post a Comment