மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று குற்றம் சொல்லி கொலை செய்வது சங்கி ஸ்டைல். மாட்டிறைச்சி வைத்திருப்பார் என்று கருதி ஒரு முதிய பெண்மணியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுனரையும் நடத்துனரையும் இடை நீக்கம் செய்தது. தமிழ்நாட்டு அரசு.
பேருந்தில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்ததும் நம்ம சுமந்திற்கு சந்தேகம் கொப்புளித்துக் கொண்டு வந்து வந்து விட்டது.
இறைச்சின்னா அதில் மாட்டுக்கறி எடுத்துக்கிட்டு போகலாமா, பன்றிக் கறி எடுத்துச் செல்லலாமா? மீனுக்கும் இடமுண்டா என்று கேள்விகளை அடுக்குகிறார்.
ஐயா சுமந்து இறைச்சி கோழி, ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் மட்டுமல்ல, முயல், காடை,கௌதாரி எல்லாமும்தான் உண்டு. இது கூட தெரியாம நீ எப்படி வினாடி வினா நிகழ்ச்சியெல்லாம் நடத்தின? பேருந்தில் அதெல்லாம் எடுத்துக்கிட்டு போனா உமக்கு ஏன் நோகுது?
No comments:
Post a Comment