மோடிக்கு
ஒரு சூப்பர் ஐடியா
எங்கள்
வேலூர் கோட்டச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம், ஆங்கிலத்தில் எழுதியதை
தமிழில் கொடுத்துள்ளேன்.
இதோ
மோடிக்கு ஒரு அற்புதமான ஆலோசனை. என்ன விலை கொடுத்தேனும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக
அவர் அதனை பின்பற்ற வேண்டும்.
அயோத்தி
ராமர் கோயிலின் ஏதாவது ஒரு மூலையை தேர்ந்தெடுத்து அமர்ந்து ராம நாமத்தை ஜபம் செய்யவும்.
ஒரு கோடி முறை அவர் ராம நாமத்தை ஜபித்த பின்பு
கண்டிப்பாக ராமபிரானும் சீதா தேவியும் அவர் முன் காட்சியளித்து என்ன வரம் வேண்டும் மகனே என்று கேட்பார்கள். ஆமாம்,
அது நிச்சயம், ஏனென்றால் மோடி தியாகராஜரை விட எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறந்தவர்
அல்லவா!
26
இஞ்ச் ஒடுங்கிய மார்பு கொண்ட தியாகராஜர் எங்கே! 56 இஞ்ச் அகல மார்பர் எங்கே! அவரோ ஒற்றை காவித்துணி கட்டுபவர். இவர் பல லட்ச
ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிபவர். (அதிலும் மைக்கேல் மதன காமராஜன் சுப்ரமணிய ராஜூ சொல்வது
போல நிமிட்டுக்கு நிமிட்டு ட்ரெஸ் சேஞ்ச் செய்பவர்).மோடி கட்டியுள்ள பிரம்மாண்டமான
கோயிலில் மிகப் பெரிய அளவில் குழந்தை ராமருக்கு சிலை வைத்துள்ளார். தியாகராஜரோ தம்மாத்தூண்டு
ராமர் விக்கிரகத்தை வைத்து பூஜித்தவர், அதையும் கூட தவறுதலாக அவர் சகோதரர் ஆற்றில்
தூக்கிப் போட்டு விட்டார். இறுதியாக முக்கியமான ஒன்று, மோடி வித விதமாக சுவை மிகுந்த
(வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லட்ச ரூபாய் மதிப்பிலான காளான் உட்பட)
விருந்தை அன்றாடம் சாப்பிடுபவர். அவரோ தினசரி கிராமத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டி உஞ்சவிருத்தி
எடுத்து உண்பவர்.
காங்கிரஸ்
கட்சி இல்லாத, ஆமாம், கம்யூனிஸ்டுகளும் இல்லாத, காந்தி குடும்பம் துடைத்தெறியப்பட்ட பாரதம் வேண்டும்
என்று மோடி கேட்டால் சீதாதேவி சமேத ராமபிரான் மறுக்கவா போகிறார்! அப்படிப்பட்ட தருணத்தில்
எண்ணற்ற சாவர்க்கர்களும் கோட்சேக்களும் அவரோடு துணை நிற்பார்கள். இதை விட வேறென்ன சிறந்த
வரம் மோடிக்கு கிடைக்கப்போகிறது!
இதன்
மூலம் மோடி (அதானி கொடுக்கும் விமானத்தில் பறந்து) நாடெங்கும் சுற்றி சுற்றி பிரச்சாரம்
செய்வதை தவிர்க்கலாம். அதன் மூலம் அரசுக்கும் கட்சிக்கும் கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும்.
அதை விட முக்கியமாக நாடு முழுதும் எந்த வித
இயற்கைப் பேரிடர் இல்லாமல் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும்.
இதை
விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? யாரங்கே! இதை உடனடியாக மோடியின் கவனத்திற்கு எடுத்துச்
செல்லுங்கள். இது மிகவும் அவசரம் – என்.ஏகாம்பரம்.
பின்
குறிப்பு 1 : அடைப்புக்குறிக்குள் இருப்பதெல்லாம் என்னுடைய பிற்சேர்க்கை.
பிகு
2 : தோழர் ஏகாம்பரம் எழுதியது என்பதால் மோடியை டிமோ என்று மாற்றவில்லை.
பிகு
3: இதை மோடி படித்தால் என்ன நடக்கும்? தெறி திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது.
விஜய்
மொட்டை ராஜேந்திரனை கேரளா போகச் சொல்வார். நினைவிலிருந்து அந்த வசனங்களை எழுதுகிறேன்.
விஜய்
: ராஜேந்திரன் நீங்க கேரளா வரைக்கும் ஒரு வேலையா போகனும்.
ராஜேந்திரன்:
சரி சார், நான் உடனே புறப்படறேன்.
விஜய்
: நீங்க வெளில வந்தாலே அந்த வானமாமலை ஆளுங்க உன்னை பிடிச்சிடுவாங்க, நான் எங்கே இருக்கேன்னு
கேட்டு உங்களை அடிப்பாங்க.
ராஜேந்திரன்
: என் உயிரே போனாலும் நான் சொல்ல மாட்டேன் சார்.
விஜய்
: சொல்லனும் ராஜேந்திரன், அப்பத்தான் அவங்க என்னை தேடி இங்க வருவாங்க, யார் கண்டது,
அந்த முட்டாப்பய வானமாமலை கூட என் எதிர்ல வந்து நிப்பான்.
அப்படியே
நடந்து வானமாமலையை விஜய் கொன்று தலை கீழாக தொங்க விடுவதாக கதை முடியும்.
வானமாமலை
இடத்தில் நீங்கள் மோடியை கற்பனை செய்தால் அதற்கு நானோ தோழர் ஏகாம்பரமோ பொறுப்பு கிடையாது.
No comments:
Post a Comment