Monday, February 12, 2024

வெட்டி ஆட்டுத்தாடிகளே வேண்டாம்.

 


வருஷத்துக்கு ஒரு தடவை சட்டப் பேரவைக்கு வந்து மாநில அரசு எழுதித்தரும் உரையை படிச்சிட்டுப் போக வேண்டியது, சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல்  அளிப்பது, இது ரெண்டுதான் ஒரு கவர்னரோட வேலை.

கொஞ்ச நாள் முன்னாடி  கேரளா ஆட்டுத்தாடி ஆரிப் மொகமது கான், கேரள சட்டப் பேரவைக்கு போய்  எதுவும் செய்யாமல் ஆளுனர் உரையை படிக்காமல் இரண்டே நிமிடத்தில் ஓடி விட்டது.

இன்றைக்கு அதே வேலையை ஆரென் ரெவி என்ற ஜந்துவும் செய்துள்ளது. இதில தேசிய கீதத்தை முதலில் ஒலிக்கலைன்னு ஒரு மொக்கை காரணம் வேற. தமிழ்நாட்டு சட்டப்பேரவையோட வழக்கத்தை உன் இஷ்டத்துக்கு எல்லாம் மாத்த முடியாது ரெவி. இஷ்டமில்லைன்னா ஹோட்டல் ரெயின் ட்ரீக்கு எதிரா இருக்கற ராஜ்பவனை காலி செஞ்சிட்டு பீகாருக்கே ஓடிப் போயிடு.

அப்படி அந்த உரைல தப்பும் தவறுமா என்ன இருந்ததுன்னு சொல்ல வேண்டியதுதானே! அப்போதானே மக்களுக்கு உண்மை தெரியும்! உங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யுதுன்னு எழுதாம டிமோ வாழ்கன்னா எழுதுவாங்க!

எந்த வேலையும் செய்யாம வெட்டியா இருக்கற உனக்கு எதுக்கய்யா ஒரு பதவி? மொத்ததில அந்த பதவியே வெட்டிதான். அதை எடுங்கய்யா! புண்ணியமா போகும்.

No comments:

Post a Comment