கடவுள்களின் பெயரையோ மரியாதைக்குரிய மனிதர்களின் பெயர்களையோ விலங்குகளுக்கு வைக்கக்கூடாது என்று தீர்ப்பு சொல்லிய ஜட்ஜய்யா/ஜட்ஜம்மா அவர்களே, உங்கள் தீர்ப்பின் அடிப்படையில் அக்பர் சிங்கத்தின் பெயரை மோடி என்று மாற்றி விடலாமா? ஏனென்றால் குஜராத் மற்றும் ஒன்றிய ஆட்சியில் அவரது செயல்பாடுகள் அவரை மரியாதைக்குரிய மனிதராக காண்பிக்கவில்லை. சொல்லப்போனால் இந்தியாவின் மரியாதையை சீரழித்தவரே இவர்தான்.
சீரியஸாக ஒன்று சொல்ல வேண்டும்.
தேர்தல் பத்திரம், சண்டிகர் மேயர் தேர்தல் என்று நீதித்துறை மீது கொஞ்சம் நம்பிக்கை வரும் தருணத்தில் அப்படிப்பட்ட மூட நம்பிக்கை எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் வண்ணம் ஒரு வெட்டி வழக்கை துவக்கத்திலேயே தள்ளுபடி செய்யாமல் விசாரித்து சங்கிகள் மனம் குளிரும் தீர்ப்பை அளிக்கிறீர்களே, இது நியாயமா?
No comments:
Post a Comment