Saturday, February 24, 2024

மோதீ- தீதீ – இருவரையும் புறக்கணிப்பீர்

 


சந்தேஷ்காளி என்று மேற்கு வங்கத்தில் ஒரு ஊர். அது கொந்தளிப்பாக இருக்கிறது. அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் போராடுகின்றன.

மம்தாவின் ஆட்சியில் பெண்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல, அவர்கள் கட்சிக்காரர்கள் எல்லோருமே குண்டர்கள், ரௌடிகள். அக்கட்சியினரையும் வன்முறையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களை எல்லாம் அக்கொடுமையே மேல் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அவதூறுகளை அள்ளி வீசுவது மம்தாவின் வாடிக்கை. அதனால் அவர் ஆட்சியில் இருக்கும் வரை தவறிழைத்த சட்டப் பேரவை உறுப்பினர் பாதுகாப்பாக தனது பாலியல் லீலைகளை தொடர்ந்து கொண்டே இருப்பார்.

இப்பிரச்சினையில் போராடும் பாஜக எப்படிப்பட்டது?

மம்தாவின் மேற்கு வங்கத்திற்கும் பாஜக ஆளும் உபி, மபி, ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. பாலியல் குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் மம்தா எப்படி பாதுகாக்கிறாரோ, அதே வேலையை உபியில் மொட்டைச்சாமியார் செய்கிறார். உபியின் உனாவ் தொகுதிக்கு பாலியல் குற்றங்களின் தலைநகர் என்றே பெயர்.

அதனால் மேற்கு வங்கப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அவர்கள் மோதியின் பாஜக, தீதியின் திரிணாமுல் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையுமே புறக்கணிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

சமீபத்தில் வாலிபர் சங்கம் கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் நடத்திய பேரணியின் பிரம்மாண்டம், பேசு பொருளாக மாறி இருக்கிறது. மக்கள் சிவப்பை மீண்டும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பதன் அடையாளமாகும்.

இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இரண்டு சந்தர்ப்பவாதக் கட்சிகளும் திட்டமிட்டு சந்தேஷ்காளி பிரச்சினையை கையிலெடுத்து   உள்ளனரோ என்று சந்தேகம் கூட வருகிறது.

சுவை தரும் கனியாய் மார்க்சிஸ்ட் கட்சி இருக்க, கசப்பான காய்கள் எதற்கு?

 

No comments:

Post a Comment