டிமோ
: பயமே இல்லாம போயிடுச்சு இல்லை! செத்துப் போன நீதிபதி லோயாவோட போட்டோவை எல்லா கோர்ட்டுங்களிலும்
வையுங்கய்யா. அவரு போட்டோவைப் பார்த்தாலே பயந்து போய் தீர்ப்பை மாத்தி எழுதிடுவாங்க.
நட்டா
: இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட ஒரே பேஜாரா போயிடுச்சுங்க. அவனுங்களும் வாங்க
மாட்டானுங்க. அடுத்த கட்சிங்க வாங்கறதையும் விட மாட்டாங்க.
நிர்மலா
சீத்தாராமன் : தேர்தல் பத்திரம் சம்பந்தமான விபரங்களை தரச் சொல்லி ஸ்டே பேங்கிற்கு
வேற உத்தரவு போட்டுருக்காங்க, நான் என்ன செய்யறது?
அதானி
: என் கம்பெனி ஆபிசர் அருந்ததி பட்டாச்சாரியாவை ஸ்டேட் பேங்க் சேர்மன் கிட்ட பேசச்
சொல்றேன். அந்தாளு நேர்மையா இருப்பேன்னு சொன்னா அந்தாளை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செஞ்சு
நம்மாளு ஒத்தரை அங்கே போட்டுடுங்க. நமக்கு ஒத்துழைச்சா அவரு ரிடையர் ஆனதுக்கு அப்பறமா
நல்ல சம்பளத்தில நான் வேலைக்கு எடுத்துக்கறேன்.
டிமோ
: இதெல்லாம் தேவையில்லாத வேலை. நம்ம ஐ.டி விங் ஆளுங்களை விட்டு ஸ்டே பேங்க் சர்வரை
ஹேக் செஞ்சு எல்லாத்தையும் அழிச்சிடுவோம்.
அம்பானி
: உங்க ஐ.டி விங்கெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்ய மட்டும்தான் லாயக்கு. அவங்க அளக்கற
கதை அஞ்சு நிமிஷம் கூட நிக்க மாட்டேங்குது. இதெல்லாம் பெரிய விஷயம். அதுக்கெல்லாம்
உங்க ஆளுங்க சரிப்பட மாட்டாங்க.
அமித்ஷா
: தலைவரே, நம்ம பஜ்ரங் தள் ஆலுங்களை அனுப்பிச்சு ஸ்டேட் பேங்க் சர்வர் ரூமை அடிச்சு
நொறுக்கி ரெண்டு குண்டை வீசிட்டு வரச் சொல்றேன்.
டிமோ
: அப்படிப் போற ஆளுங்களை வழக்கம் போல குல்லா வச்சுக்கிட்டு போகச்சொல்லு. அப்போதான்
அதை வச்சு அரசியலும் செய்யலாம்.
நட்டா
: அதெல்லாம் சரி தலைவரே! தேர்தல் பத்திரம் இல்லைன்னா நமக்கு எப்படி பணம் வரும்?
அம்பானி
: லூசாய்யா நீ? மோடிஜி இந்தாளையெல்லாம் எப்படி தலைவரா போட்டீங்க? இதுல மறுபடியும் ராஜ்ய
சபா சீட்டு வேற!
நட்டா
: அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?
நிர்மலா
சீத்தாராமன் : நான் போடற பட்ஜெட்டுலதான் துண்டு விழும். நம்ம கட்சி பட்ஜெட்டில என்னிக்காவது
கர்சீப்பாவது விழுந்திருக்கா? இந்த அண்ணாமலை பையன் கூட போற ஒவ்வொரு ஊர்லயும் முப்பது
லட்சம், நாப்பது லட்சம்னு ஒவ்வொரு நாளும் வசூல் செய்யறான். அதெல்லாம் தேர்தல் பத்திரம்
மூலமா வருது?
அமித்
ஷா : நட்டாஜி, நமக்கு வர நிதில நூத்துல ஒரு பங்குதான் தேர்தல் பத்திரம் மூலமா வருது.
மத்ததெல்லாம் கருப்பு பணமாதான் வருது.
அதானி
: உங்க கிட்ட இருக்கற கருப்புப் பணத்தை வச்சே இந்திய மக்கள் எல்லாருக்கும் பதினைந்து
லட்ச ரூபாய் தரலாம்.
நட்டா
: அப்டின்னா இந்த தீர்ப்பைப் பத்தி கவலைப்பட
வேண்டாம்.
டிமோ
: ஆமாம்யா, இது வரைக்கும் வெள்ளையா வந்த 1 % மும் இனிமே கருப்பா வந்துரும். அதனால உன்
அல்லக்கை யாரையாவது விட்டு தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்னு அறிக்கை விடச் சொல்லு. நாம்
ஆட்சில இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி, நம்ம அதானி, அம்பானியெல்லாம் எப்பவும் போல
நம்ம கட்சிக்கு நிதி தருவாங்க!
அதானியும்
அம்பானியும் ஒன்றாக : லூசாங்க நீங்க? நீங்க ஆட்சிக்கும் வரணும், ஆட்சியில இருக்கீங்க,
நமக்கு ஏத்தமாதிரி நடந்துப்பீங்கன்னு தரோம். ஆட்சியில இல்லாத போதும் கொடுக்க நாங்க
என்ன லூசா? என்று சொல்லி விட்டு போகிறார்கள்.
அமித்
ஷா : என்னங்க இப்படி பேசறாங்க? இவங்களுக்கு எவ்ளோ செஞ்சிருக்கோம்!
நிர்மலா
சீத்தாராமன் : இவங்க கடனையெல்லாம் தள்ளுபடி செஞ்சதக்கு எனக்குத்தான் திட்டு விழுந்திருக்கு.
டிமோ
: கவலைப்படாதீங்கய்யா, இவங்க தருவாங்க, தர வைப்போம். நம்மை பகைச்சிக்கிட்டு தொழில்
செய்ய முடியுமா? நம்ம குரங்குப் படை ஐ.டி படையெல்லாம் எதுக்கு இருக்கு!
பிகு
1 : இப்படி ஒரு கூட்டம் நடந்ததா என்று தெரியாது. நடந்திருக்காது என்று உங்களால் உறுதியாக
சொல்ல முடியுமா?
பிகு
2 : இந்த பதிவிற்கு எதற்கு ட்ரக் மாபியா ரோலக்ஸின் படம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த
கூட்டமும் போதைப் பொருள் மாபியாதான். இவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருளின் பெயர்
மதம்.
No comments:
Post a Comment