தன லாபம் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் கிடைத்துள்ளதாக பாஜக வானதி சீனு பீற்றிக் கொண்டாரல்லவா, அந்த சர்டிபிகேட் கொடுத்த நிறுவனத்தின் யோக்கியதை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் எழுதியுள்ள பதிவை படியுங்கள்.
சங்கிகள் எது செய்தாலும் அது திருட்டுத்தனம் மட்டுமே . . .
ISO 9001:2015 - த(ர்)ர சர்டிபிகேட்டா? வாங்குற சர்டிபிகேட்டா?
சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜகவின் BJP Tamilnadu எம்எல்ஏ திரு. வானதி ஸ்ரீனிவாசன் Vanathi Srinivasan அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் தமிழகத்திலேயே அதுதான் முதல் என்றும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
நிற்க...
மதுரை நகரத்தின் ஊடாக பாயும் வைகையின் கிளை நதியான கிருதுமால் நதி சாக்கடை நதியாகவே இப்போதும் இருக்கிறது. இதை சுத்தப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாவட்டக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. இயக்கங்களையும் நடத்தியுள்ளது. ஆனால், இப்போதும் சாக்கடை கழிவுகள் கலக்கும் இடமாகவே இருந்து வருகிறது.
அந்த நதிக்கு ISO 9001:2015 தரச் சான்று வேண்டுமெனக் கோரி மதுரையைச் சார்ந்த ஆர்.எம்.பாபு RM Babu Mallanginar என்பவர் விண்ணப்பிக்க, 5000 கொடு, 3000 கொடு என்று கேட்டு, இறுதியாக 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு கிருதுமால் சாக்கடை நதி என்கிற பெயரில் சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது அந்த நிறுவனம். பாராட்டப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் அவர்கள் கறாராக 180 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்துவிட்டார்கள். அவ்வளவு தேசபக்தி.
அந்த நிறுவனம் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் அலுவலகத்திற்கு தரச் சான்று வழங்கிய அதே Quality Research Organization நிறுவனம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சாக்கடையை குடிநீர் என்று தரச் சான்று வழங்கியிருப்பதுதான். சாக்கடைக்கு குடிநீர் என்று தரச் சான்று கொடுத்தவர்கள்தான் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சிறந்த சட்டமன்ற அலுவலகம் என்று சான்று வழங்கியிருக்கிறார்கள்.
இப்போது திரு. வானதி ஸ்ரீனிவாசனும் பாஜகவும் அந்த சர்டிபிகேட்டை அலுலவகத்தில் மாட்டி வைப்பார்களா? கிருதுமால் நதியில் வீசிவிடுவார்களா என்பதுதான் சாதாரணமான கேள்வி.
No comments:
Post a Comment