Sunday, February 18, 2024

தண்டத்துக்கு ஒரு மக்களவை

 



பதினேழாவது மக்களவை போல வேஸ்டான ஒன்று எதுவுமே கிடையாது.

 ஆமாம்.

 ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டுமே கூடியுள்ளது. முதலாவது மக்களவை ஆண்டிற்கு 135 நாட்கள் செயல்பட்டுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் இக்காலக்கட்டத்தில் கேலிக்கூத்தானது புரியும்.

 எந்த ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் நோட்டீஸ் அளித்த பிரச்சினையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

 முக்கியமான பல மசோதாக்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அதிகபட்ச உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட மக்களவையும் இதுதான்.

 உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத பிரதமரைக் பார்த்தது இந்த மக்களவை.

 இதை விட முக்கியமான ஒன்று உண்டு.

 துணை சபாநாயகரே தேர்ந்தெடுக்கப்படாத மக்களவை இதுதான். எதிர்க்கட்சி உறுப்பினர்தான் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது என்பது மரபு. அதற்குக் கூட மனமில்லாத அற்ப ஜந்துக்களின் கையில் இருந்த 17 வது மக்களவை நிஜத்தில் தண்ட  அவை.

இந்த தண்டக் கருமாந்திரங்கள் பதினெட்டாவது மக்களவைக்கும் வர வேண்டுமா?

No comments:

Post a Comment