வானதி அம்மையாரின் தன லாபம் என்று எழுதப்பட்டுள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாம். ஆர்.எஸ்,எஸ். ரெவிக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்த சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
முதல்வர் படம் பின்னணியில் உள்ளதைப் பார்த்தீர்களா மிஸ்டர் ஆட்டுக்காரன் & ஆட்டுத்தாடி ? மூன்று எம்.எல்.ஏ க்கள் உள்ளார்கள், பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எங்கே? சரி அதெல்லாம் அவங்க கட்சி பிரச்சினை, நமக்கெதற்கு!
ஐ.எஸ்.ஓ சான்றிதழ் கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ன ஒரு தொழிற்சாலையா அல்லது உணவு விடுதி போன்ற சேவைத்தொழில் வணிக நிறுவனமா?
ஆமாம். வானதி சீனிவாசனின் அலுவலகம் ஒரு வணிக நிறுவனம்தான். கட்சிக்காரரின் கடையில் வாங்கிய மின் விசிறிக்கு ட்யூ கட்ட முடியாத ஒருவர் இன்று கோடிக்கணக்கான சொத்துக்கள் கொண்டவராய் மாறி, தன் அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்துள்ளார் என்றால் அவருக்கு கொடுக்காமல் யாருக்கய்யா தருவார்கள்!
பிகு: இந்த சான்றிதழ் கொடுத்த நிறுவனத்தை நடத்துவதும் ஒரு பாஜக ஆள்தானாம் என்பது சும்மா தகவலுக்காக . . .
No comments:
Post a Comment