Thursday, February 15, 2024

ஆட்டுக்காரன் அளப்பை எல். முருகனே நம்பலை.

 


மத்திய இணை அமைச்சராக இருக்கிற, தேசிய எஸ்.சி வாரியத்தின் துணைத் தலைவராக இருந்து தலித் மக்களுக்கு துரோகம் செய்த எல்.முருகனுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு மீண்டும் வழங்கப் பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் மீண்டும் அவருக்கு படியளிக்கிறது.

அதற்கு என்ன அர்த்தம்?

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் எல்.முருகன் வெற்றி பெற முடியாது என்பதே.

லட்சக்கணக்கில் வசூல் செய்து பணத்தை கொட்டிக் கொடுத்து கூட்டம் சேர்க்கும் ஆட்டுக்காரன், தமிழ்நாட்டில் பாஜக 15 தொகுதிகளை வெற்றி பெறும் என்று அளப்பதை எல்.முருகன் நம்பவில்லை என்பதுதான் அர்த்தம்.

ஆட்டுக்காரனுக்காக கதை விட்டுத் திரியும் சங்கிகள் இதற்கு முட்டு கொடுத்து என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்று அறிய ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று பாஜக பயந்து விட்டதல்லவா, அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு.

No comments:

Post a Comment