மோடி பற்றிய நான்கு பதிவுகளுக்கான விஷயங்கள் ஒரே பதிவில்
மீம் இல்லைங்க, நியூஸ்
பொம்மை
தயாரிப்பு பற்றி மோடி சொன்னதா படத்தில் இருப்பது மீம் இல்லைங்க. நிஜமாகவே அவர் பேசினதுதாங்க.
ஆனால்
மீம் போடத் தகுதியான ஒரு விஷயத்தையும் மோடி பேசியுள்ளார். எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின்
பதிவு எஸ்.எஸ்.எல்.சி பெயிலை விட ஏழாங்கிளாஸ்
பாஸ்தான் பெரிது என்று சொல்லும் ஜெண்டில்மேன் செந்தில் அளவுதான் மோடியின் மூளை அளவு
என்பதை காண்பிக்கிறது.
அதே
நேரம் மோடியின் இன்றைய நிலை கண்டு மிகவும் வருந்துகிறேன். நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்
ஆகியோருக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், டொனால்ட் ட்ரம்ப், ஷீ ஜின் பிங்
ஆகியோரோடு குலாவிக் கொண்டிருந்த ஒரு நபர், கடைசியில் திண்டுக்கல் லியோனியைப் பற்றியெல்லாம்
பேசுமளவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே தமிழ்நாடு சங்கிகளே! உங்களுக்கெல்லாம் மன சாட்சியே
கிடையாதா?
நினைவுக்கு வந்தார்களா?
இது மட்டும் கலாய் அல்ல. சீரியஸாகவே கேட்கிறேன்.
சரி
மோடிஜி, ஒரே ஒரு கேள்வி அதிமுக-பாஜக கூட்டணிதான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று நீங்கள்
பேசிய போது பொள்ளாச்சி பெண்கள், குளியறையை சோதனையிட்ட பன்வாரிலால் புரோஹித், அவருக்காக
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை காண்பித்த பேராசிரியர் நிர்மலா
தேவி, பாலியல் கொடுமை பிரபலம் உனாவ் எம்.எல்.ஏ செனகர், நீங்கள் போற்றிய சாமியார் ஆச்சாராம்
பாபு, காஷ்மீர் ஆசிபா, ஹத்ராஸ் மணிஷா,மிக முக்கியமாக உங்களால் கைவிடப்பட்ட யசோதா பென்
ஆகியோர் நினைவுக்கு வந்தார்களா?